ரவி மோகனின் நெருங்கிய தோழி கெனிஷா கர்ப்பமா?.. அதிர்ச்சியான ரசிகர்கள்.. இதோ முழு விவரம்
சென்னை: ஆர்த்தியை ரவி மோகன் விவாகரத்து செய்ததிலிருந்து கெனிஷாவும் தலைப்பு செய்திகளில் ஒருவராக மாறினார். ஏனெனில் அந்த விவாகரத்துக்கு அவர்தான் காரணம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அதற்கு ரவியோ, அவரோ எந்த பதிலும் கொடுக்கவில்லி. அதேசமயம் இரண்டு பேரும் ரொம்பவே நெருக்கமாக இருக்கிறார்கள். அண்மையில் நடந்த ரவி மோகன் ஸ்டூடியோஸ் திறப்பு விழாவிலும் ஓடியாடி பல வேலைகளை செய்தார் கெனிஷா.
நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்துக்கு நடிகை குஷ்பூதான் முக்கிய பங்கு வகித்தார். ரவியும் ஆர்த்தியும் நல்லபடியாக பத்து வருடங்களுக்கு மேலாக சுமூகமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். மேலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரியும் நீதிமன்றத்துக்கு சென்றார் அவர்.
யார் காரணம்?: இந்த பிரிவுக்கு காரணமாக பல கதைகள் சொல்லப்படுகின்றன. அதாவது ஆர்த்தியின் தாய் சுஜாதாவின் தயாரிப்பில் ரவி படங்கள் நடித்தார். அந்தப் படங்கள் எல்லாம் தோல்வியடைந்து பொருளாதார ரீதியாக சிக்கலை உருவாக்கின. மேலும் அவரை சுஜாதாவும், ஆர்த்தியும் முழுக்க முழுக்க தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றெல்லாம் திரைத்துறையில் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருந்தன.

ரவியின் விளக்கம்: இப்படிப்பட்ட சூழலில் ரவி வெளியிட்டிருந்த அறிக்கையிலும் மறைமுகமாக அதனையே கூறியிருந்தார். ஆனால் அதனை சுஜாதா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும் ஆதாரங்களையும் கேட்டிருந்தார். இது ஒருபக்கம் இருக்க இந்த விவாகரத்து முடிவு தனக்கு தெரியவே தெரியாது என்று ஆர்த்தி கூறினார். மேலும், பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்தார். ரவியோ அதற்கு ஒத்துவரவில்லை. இதனால் பல கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டிருந்தார் ஆர்த்தி.
கெனிஷாவுடன் பழக்கம்: இதற்கிடையே ரவி மோகனுக்கும் பின்னணி பாடகி கெனிஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம்தான் ஆர்த்தியை ரவி பிரிவதற்கு முக்கியமான காரணம் என்று கணிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி எனது வாழ்க்கையில் வந்த ஒளிதான் கெனிஷா என்றும் ரவி மோகன் உருக்கத்தோடு கூறியிருந்தார். இதன் காரணமாக பலரும் ரவிக்கும், கெனிஷாவுக்கும் இடையே காதல்; விரைவில் திருமணம் என்றும் பேச ஆரம்பித்தார்கள்.
குடும்பத்தில் ஒருத்தர்: சமீபத்தில்கூட ரவி மோகன் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அதன் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் குடும்பத்தில் ஒருவர் போல் முன்வரிசையில் நின்று ஏகப்பட்ட வேலைகளை ஓடியாடி செய்தார் கெனிஷா. அதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள் ரவிக்கும், கெனிஷாவுக்கும் நட்பை தாண்டிய ஒரு உறவு இருக்கிறது என சொல்ல ஆரம்பித்தார்கள்.
என்னது நான் கர்ப்பமா?: இந்நிலையில் கெனிஷா கர்ப்பமாக இருக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே தகவல்கள் தீயாக பரவிக்கொண்டிருந்தன. அதுகுறித்து விளக்கமளித்திருக்கும் அவர், "நான் இறுதியாக இன்ஸ்டாகிராமில் போட்ட ஸ்டோரியை பார்த்து நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் எனது வயிறை பாருங்கள். அதில் சாப்பாடு மட்டும்தான் செல்கிறது. நான் கர்ப்பமாக இல்லை. அந்த வீடியோ வேறு ஒரு அறிவிப்புக்கானது" என்றார்.


Click it and Unblock the Notifications











