ரவி மோகனின் அடுத்த படம் கராத்தே பாபு.. டாடா இயக்குநர் பண்ணி வச்சிருக்கிற தரமான சம்பவத்தை பாருங்க!
சென்னை: கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இயக்குநர் கணேஷ் கே. பாபு. அவரது இயக்கத்தில் அடுத்ததாக ரவி மோகன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படத்தின் டைட்டில் டீசர் அட்டகாசமான அரசியல் அதகள காட்சிகளுடன் வெளியாகி உள்ளன.
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ரவி தன்னை ஜெயம் ரவி என்றே இத்தனை ஆண்டுகள் அடையாளப்படுத்தி வந்த நிலையில், மனைவி ஆர்த்தியை பிரிந்த அவர் திடீரென அடுத்தடுத்த முடிவுகளை புதிது புதிதாக எடுக்கத் தொடங்கியுள்ளார்.

ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என்றும் ரவி அல்லது ரவி மோகன் என இனிமேல் ரசிகர்கள் அழைக்க வேண்டும் என அன்பு கோரிக்கை வைத்த அவரது படத்தின் தலைப்பும் அவரை போலவே சண்முக பாபு என்பதில் இருந்து கராத்தே பாபுவாக மாறும் காட்சிகள் எல்லாம் வேறலெவல் சம்பவம்.

ஆர்கே நகர் தேர்தல்: இதுவரை ஜெயம் ரவி அரசியல் கதைக்களத்தில் நடிக்காத நிலையில், பக்காவான அரசியல்வாதியாக அதுவும் ஆர்கே நகர் இடைத் தேர்தலை மையப்படுத்திய கதையில் கராத்தே பாபு என்கிற அரசியல் தலைவராக நடித்துள்ளார். டாடா படத்தின் இயக்குநரின் அடுத்த படம் ரொமாண்டிக் படமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாக இந்த டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது.
கே.எஸ். ரவிக்குமார் - நாசர் அல்டிமேட்: தமிழ்நாட்டை தமிழகமாக மாற்றிவிடக் கூடாது என்கிற வசனத்தை நாசர் பேசும்போதே டைட்டில் டீசர் அனல் பறக்கிறது. பாவம் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைமை என்னவாகுமோ என நெட்டிசன்கள் ட்ரோல் பண்ண ஆரம்பித்துவிட்டனர். நாசர், கே.எஸ். ரவிக்குமார், இயக்குநர் வாசுவின் மகன் சக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் எப்போ பாஸ் வரும் என ரசிகர்கள் டீசரை பார்த்தவுடனே எதிர்பார்ப்புகளை எகிற விட ஆரம்பித்துவிட்டனர்.
ரவி மோகனுக்கு வெற்றி கிடைக்குமா?: சோலோ ஹீரோவாக கோமாளி படத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக வெற்றிப் படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுக்க முடியாமல் ரவி தவித்து வருகிறார். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், டாடா இயக்குநரின் டைரக்ஷனில் உருவாகும் இந்த படம் நிச்சயம் ரவி மோகனுக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











