இனிமேல் நல்லபடியாக வாழ்வேன்.. ரவி மோகன் என்ன பப்ளிக்காவே இப்படி சொல்லிட்டாரே?

சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து சட்டப்பூர்வமாக விவாகரத்தும் பெறவிருக்கிறார். மேலும் தனது தோழியான கெனிஷாவை அவர் திருமணம் செய்துகொள்ளலாம் என்றே பலராலும் கருதப்படுகிறது. சமீபத்தில்கூட இரண்டு பேரும் திரை நட்சத்திரங்களுக்கு பார்ட்டி ஒன்றை கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் 3 BHK பட விழாவில் ரவி மோகன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் ரவி மோகன். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆர்த்தியும், ரவியும் முழு காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் யார் கண் பட்டதோ கடந்த சில வருடங்களாகவே அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டதாக பேசப்பட்டது. அமைதியாக இருந்த ரவியோ; ஆர்த்தியை பிரிவதாக திடீரென்று அறிவித்தார். ஆனால் தன்னிடம் எதையுமே ஆலோசிக்கவில்லை என்று ஆர்த்தி கூறியிருந்தார்.

கெனிஷாவுடன் ரவி: அதனையடுத்து இந்த விஷயம் கொஞ்சம் ஆறிப்போனது. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்துக்கு கெனிஷாவுடன் வந்திருந்தார் ரவி. ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரையும் இணைத்து பேசப்பட்டபோது அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு கெனிஷாவுடன் அவர் வந்திருந்தது மேலும் இந்தப் பிரச்னையை சூடாக்கியது.

Ravi Mohan s speech at the 3 BHK film festival saying he will live a better life from now on

ஆர்த்தியின் அறிக்கை: அந்த வருகையை எதிர்பார்க்காத ஆர்த்தி காட்டமாகவும், எமோஷனலாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கைக்கு பிறகு குஷ்பூ உள்ளிட்டோர் ஆர்த்திக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆர்த்தியின் அறிக்கைக்கு பிறகு ரவியும் தன் பங்குக்கு வெளியிட்ட அறிக்கையில் ஆர்த்தியையும் அவரது தாய் சுஜாதாவையும் குற்றஞ்சாட்டியிருந்தார். பிறகு சுஜாதாவும் தன் பங்குக்கு அறிக்கை வெளியிட்டார்.

ஜீவனாம்சம் கேட்ட ஆர்த்தி: விஷயம் இப்படி சென்றுகொண்டிருக்க ரவி - ஆர்த்தி விவாகரத்து மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி மோகன் தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அது பெரிய விவாதமாகியது. இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் ரவியும் கெனிஷாவும் சேர்ந்து திரையுலக நட்சத்திரங்களுக்கு பார்ட்டி ஒன்றை கொடுத்தார்கள். அதில் சுதா கொங்கரா, மாதவன் உள்ளிட்டோர் எல்லாம் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவியின் பேச்சு: இந்நிலையில் 3 BHK படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரவி மோகன் பேசுகையில், "நான் பிறந்ததிலிருந்து சொந்த வீட்டில்தான் இருந்தேன். இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். இந்தப் படத்தில் வந்த பல விஷயங்களை என்னோடு இணைத்துக்கொள்ள முடிந்தது. இப்படம் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. எனது வாழ்க்கையை மீண்டும் வாழப்போவதாகவும்; இனிமேல் நல்லபடியாக வாழப்போகிறேன் என்றும் தோன்றியது" என குறிப்பிட்டார்.

3 BHK: 3 BHK திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது ஜூலை நான்காம் தேதி வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஸ்ரீகணேஷ் இயக்கியிருந்த 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்கள் பெரிய கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X