நடிகை பார்லரில் துப்பாக்கிச்சூடு... இதுக்காகத்தானாமே? பிரபல தாதா எல்லாத்தையும் சொல்லிட்டாராம்!

By

பெங்களூரு: நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தனது ஆட்கள்தான் என்று பிரபல தாதா ரவிபூஜாரி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தமிழில் கார்த்தி நடித்த பிரியாணி, இந்தியில் ஜான் ஆபிரஹாம் நடித்த மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர், நடிகை லீனா மரியா பால்.

கேரளாவைச் சேர்ந்த இவர், மலையாளத்தில் ரெட் சில்லீஸ், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

இவர் கொச்சியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் இங்கு சரமாரியாகச் சுட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பானது. சம்பவம் நடந்தபோது பார்லருக்குள் வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. பிரபல தாதா ரவிபூஜாரியின் ஆட்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

புழல் சிறையில்

புழல் சிறையில்

நடிகை லீனா மரியா பால், தனது காதலர் சுகாஷ் சந்திரசேகருடன் சேர்ந்து, சென்னை அம்பத்தூர் கனரா வங்கியில், போலி ஆவணம் மூலம் 19 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தோணி பெர்னாண்டஸ்

அந்தோணி பெர்னாண்டஸ்

இந்நிலையில், செனகல் நாட்டில் அந்தோணி பெர்னாண்டஸ் என்ற பெயரில் மறைந்திருந்த தாதா ரவிபூஜாரியை, போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். பெங்களூரில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டல், பணம் பறித்தது உட்பட பல்வேறு குற்ற நடவடிக்கைகள் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் பறிப்பதற்காக

பணம் பறிப்பதற்காக

பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான், சல்மான் கான், அக்‌ஷய்குமார், கரண் ஜோஹர் உட்பட பல பிரபலங்களை அவர் மிரட்டியுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் நடிகை லீனா மரியா பால் பார்லரில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, தனது ஆட்கள்தான் என்றும் பணம் பறிப்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கேரளாவுக்கு அவரை கொண்டு சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X