நடிகருக்காக தீக்குளித்து உயிரை விட்ட ரசிகரின் கடைசி வார்த்தை இது தான்
Recommended Video

பெங்களூரு: நடிகர் யஷுக்காக தீக்குளித்து உயிரை விட்ட ரசிகர் கூறிய கடைசி வார்த்தை என்னவென்று தெரிய வந்துள்ளது.
கன்னட நடிகர் யஷின் பிறந்தநாள் நேற்று. நடிகர் அம்பரீஷ் அண்மையில் காலமானதால் யஷ் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இதனால் மனமுடைந்த ரவி என்ற ரசிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
70 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

மருத்துவமனை
மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது யஷ் வருவாரா, அவரை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார் ரவி. இறுதியில் யஷ் வந்தபோது அவரை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். அதன் பிறகு ரவி இறந்துவிட்டார். ரவியின் மறைவால் யஷ் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

அன்பு
ரசிகர்கள் அன்பு வைக்க வேண்டியது தான். அதற்காக தற்கொலை செய்வது, தங்களை காயப்படுத்திக் கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. என்னை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இனி யாராவது தற்கொலைக்கு முயற்சி செய்தால் நான் வர மாட்டேன் என்று யஷ் தெரிவித்துள்ளார்.

சினிமா
எனக்கு இந்த வாழ்க்கையோ, துறையோ தேவையில்லை என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். என் மீதான அன்பையும், மரியாதையையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். படங்களை பார்த்து ஆதரவு அளியுங்கள். எங்களிடம் இருந்து ஏதாவது நல்லதை கற்றுக் கொள்ள முடியும் என்றால் செய்யுங்கள். மற்றவர்களுக்கு உதவுங்கள் என்று யஷ் எமோஷனலாக கூறியுள்ளார்.

பெற்றோர்
மருத்துவமனைக்கு சென்ற யஷ் ரவியின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார். எங்களின் மகன் செய்ததற்கு நீங்கள் என்ன பண்ண முடியும் என்று ரவியின் பெற்றோர் பெருந்தன்மையாக கூறியுள்ளனர். ரசிகர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று யஷ் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











