ரவிக்கு குறும்பு ஜாஸ்திதான்... மாமாகிட்டயே பர்மிஷன் கேட்கறானே...!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டும்தான் ரொமான்ஸ் இப்போ கொஞ்சம் தூக்கலா இருக்கு.
பாக்கிய லட்சுமியும், ரவியும் பண்ற ரொமான்ஸ்... நட்சத்திர கொண்டாட்டத்துல சேலம் வரைக்கும் போயிருக்கு.
இவங்க ரெண்டு பேர் ரொமான்ஸை ஜனங்க பார்த்து பார்த்து ரசிக்கறாங்க .எந்த மேடை கிடைச்சாலும் ரொமான்ஸ் பண்ண சொல்லி ரசிக்கறாங்க.

வால் பேப்பர்
ரவி தன் செல்போனில் பாக்கியலட்சுமி போட்டோவை வால் பேப்பரா வச்சு பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கான்.இதை கடையில வேலை செய்யற ஒரு பெண் பார்த்துடறா.என்ன ரவி...நீ குடுத்த சேலையை பாக்கிய லட்சுமி கட்டிக்கிட்டு இருக்கா...நீ பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கியான்னு கேட்கறாங்க..

சேலையை ரவிகிட்ட
பாக்கிய லட்சுமி.. ரவி கிஃப்டா குடுத்த சேலையை வாங்கவே மாட்டேன்னு சொல்லிட்டு அதை உடுத்தி இருக்கே...எல்லாம் வெளியிலதான்.. மனசுக்குள்ள வேற வேற எல்லாம் நடக்குது போலருக்குன்னு அந்த அக்கா பாக்கியலட்சுமிகிட்ட வந்து கிண்டல் பண்றாங்க...

வச்சதுக்கா
அக்கா நான் ரவி ஆர்டர் குடுத்த புடவையை வாங்கிக்கலை...சாமிகிட்ட வச்சு பூஜை செய்த சேலையைத்தான்க்கா வாங்கிக்கிட்டேன்.. உங்களுக்குத்தான் தெரியும் இல்லேன்னு சொல்றா பாக்கியலட்சுமி..

ரவியோட பிளான்
அது ரவியோட பிளான்மா... ரவி ஆர்டர் குடுத்தேன்னு சொன்னது அவன் ஃபிரண்டோட சிஸ்டருக்கு.அதைத்தான் உனக்குன்னு நினைச்சு தேஜா வாங்கிக்கிட்டா...ரவி உனக்குன்னு ஆர்டர் செய்த சேலையைத்தான் பிளான் பண்ணி பூஜையில் வச்சு உனக்கு குடுத்துட்டான்னு சொல்றாங்க அக்கா.

உங்களுக்கு எப்படி
அக்கா நீங்க எப்போ நான் அந்த சேலை உடுத்தினதை பார்த்தீங்க..உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்கறா பாக்கியலட்சுமி.ரவி அந்த போட்டோவை போன்ல வால் பேப்பரா வச்சிருக்கான்னு சொல்றா... அப்படியா...யாராவது பார்த்துட்டா என்ன ஆகறதுன்னு சொல்றா..

தப்பில்லை
அப்போ ரவி தன்னோட போன்ல உன் போட்டோவை வால் பேப்பரா வச்சிருக்கறது தப்பில்லை.யாராவது பார்த்துட்டா என்ன செய்யறதுன்றதுதான் உன் கவலை இல்லைன்னு அக்கா கேட்கறாங்க.

ரவி போனை
ரவி உங்க போனைக் குடுங்கன்னு கேட்கறா... எதுக்கு பஞ்சுன்னு கேட்கறான்.அது ..வந்து என் போன்ல பேலன்ஸ் இல்லேன்னு சொல்றா. என் போன்ல சார்ஜ் இல்லைன்னு சொல்றான் ரவி.விளையாடாதீங்க ரவி..அதுல எதுக்கு என் போட்டோவை வால் பேப்பரா வச்சு இருக்கீங்க..யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்கன்னு கேட்கறா.

லட்சுமி சாமியைத்தான்
நான் லட்சுமி சாமியைத்தானே வச்சு இருக்கேன்..இது தப்பா..இருங்க மாமாகிட்டயே கேட்டுடலாம்னு டெல்லி கணேஷ் கிட்ட கேட்கறேன்.மாமா போன்ல லட்சுமி படத்தை வச்சா தப்பான்னு..லட்சுமி சாமி படம்தானே தாராளமா வச்சுக்கலாம்னு சொல்றார் அவர்.

பாக்கியம் கிடைக்கணும்னா
மாமா..பாக்கியம் கிடைக்கணும்னா எந்த லட்சுமியை வச்சுக்கணும்னு கேட்கறான்.அவர் திரும்பிப் பார்க்காமலே அப்போ பாக்கிய லட்சுமியையே வச்சுக்கோன்னு சொல்றார். மாமாவே சொல்லிட்டார்னு சொல்லிட்டு போறான் ரவி.
இது எப்படி இருக்கு?


Click it and Unblock the Notifications











