ரவி தேஜாவின் ராமாராவ் ஆன் ட்யூட்டி.... பட்டையை கிளப்பும் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்

ஐதராபாத் : தெலுங்கு படவுலகின் முக்கிய ஹீரோவாக வலம்வரும் ரவி தேஜாவின் 68வது படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

புதுமுக இயக்குநர் சரத் மண்டவா இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் டைட்டில் உள்ளிட்டவை வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை ரவி தேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முக்கிய ஹீரோ

முக்கிய ஹீரோ

தெலுங்கு படவுலகின் முக்கிய ஹீரோவாக வலம்வந்து கொண்டிருப்பவர் ரவி தேஜா. புதுமுக இயக்குநர் சரத் மண்டவா இயக்கத்தில் இவர் ஆர்டி68 படத்தில் நடித்து வருகிறார். எப்போதும் புதுமுக இயக்குநர்களுக்கு தோள் கொடுத்து படங்களில் நடித்து வருகிறார் ரவி தேஜா.

பர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு

பர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு

இந்நிலையில் தற்போது இவரது ஆர்டி68 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டைட்டிலையும் ரவி தேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மிகவும் வித்தியாசமான வகையில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

ஸ்மார்ட்டாக காணப்படும் ரவி தேஜா

ஸ்மார்ட்டாக காணப்படும் ரவி தேஜா

சுதாகர் செருகுரி மற்றும் ஆர்டி டீம்வொர்க்ஸ் சார்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், வித்தியாசமான கெட்டப்பில் ரவி தேஜா இந்த போஸ்டரில் காணப்பட்டாலும் அவரிடம் ஒரு பொறுமை காணப்படுகிறது. இந்த படத்தில் அவர் தனது வெயிட்டை கணிசமாக குறைத்து மேலும் ஸ்மார்ட்டாக காணப்படுகிறார்.

Recommended Video

நடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்ய காரணமான நடிகை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
மாறுபட்ட கெட்டப்

மாறுபட்ட கெட்டப்

படத்தில் அவர் மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிவது போல காணப்படுகிறார். இதற்கான உறதிமொழி மற்றும் வாகனம் உள்ளிட்டவற்றையும் அந்த போஸ்டரில் காணமுடிகிறது. இந்த போஸ்டருக்கு முன்னதாக ஒரு போஸ்டர் வெளியானது. அதில் மாறுபட்ட இருவேறு கேரக்டர்களை காண முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X