ஸ்ருதி ஹாசனுக்கு ஸ்பெஷல் பர்த் டே பரிசை கொடுத்துள்ள ரவிதேஜாவின் ‘கிராக்’ படக்குழுவினர்!
ஐதராபாத்: தெலுங்கு சினிமாவின் பவர் பேக் ஆக்ஷன் நடிகர் ரவி தேஜாவிற்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதனை ஒட்டி அவரது அடுத்த படமான கிராக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
இன்று அப்படத்தின் ஹீரோயின் ஸ்ருதி ஹாசன் பிறந்த நாளையொட்டி அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

ரவி தேஜா தெலுங்கு சினிமாவின் ஒரு முன்னணி நடிகர்களுள் இவரும் ஒருவர். பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார் மற்றும் பல நடிகர்கள் படத்தில் கெஸ்ட் ரோலிலும் வந்து சென்றுள்ளார். இவர் நடித்த நீ கோசம், இடியட், பாத்ரா, சம்போ சிவ சம்போ ஆகிய படங்கள் அங்கு பெரும் வெற்றி பெற்றது.
இவர் நடித்த டிஸ்கோ ராஜா படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தெலுங்கு சினிமாவில் ஒரு பக்கா மாஸ் ஆக்ஷன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரவி தேஜா.
இப்பட வெற்றியை அடுத்து இயக்குனர் கோபி சந்து உடன் இணைந்தார் ரவி தேஜா இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
இவர் பார்த்து தான் சில விசயங்களை கற்று கொண்டோம் என்றும் இவர் ஆடும் ஆட்டம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றும் தெலுங்கு திரையுலகில் உச்ச நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பவண் கல்யாண் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ரவிதேஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு "க்ராக்" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது, இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ஸ்ருதி ஹாசனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











