கொரோனாவுக்கு பின்.. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'மாஸ் மகாராஜா'வின் க்ராக்.. தமிழில், டப் ஆகிறது!
சென்னை: தெலுங்கில் வரவேற்பை பெற்ற க்ராக் படம், தமிழ், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு தெலுங்கில் வெளியான முதல், பெரிய பட்ஜெட் படம், கிராக்.
இதில் மாஸ் மகராஜா என அழைக்கப்படும் நடிகர் ரவிதேஜா ஹீரோவாக நடித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்
ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார், வில்லன்களாக சமுத்திரகனி, ஸ்டன் சிவா, ரவிசங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். தனது சரஸ்வதி ஃபிலிம்ஸ் டிவிஷன் சார்பில் பிரபல தயாரிப்பாளர் மது இதைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் ஜனவரி 9 ஆம் தேதி, தெலுங்கில் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றது.

கோபிசந்த் மலினேனி
தொடர்ந்து சில தோல்வி படங்களை கொடுத்துவந்த ரவிதேஜாவுக்கு இந்தப் படம் ஹிட்டாக அமைந்தது. இதை கோபிசந்த் மலினேனி இயக்கி இருந்தார். தமன் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் பக்கா கமர்சியலாக உருவாகி உள்ளது.

கூட்டம் குறையவில்லை
ரசிகர்களின் கோலாகல வரவேற்பில், பம்பர் ஹிட்டடித்தது. பல முன்னணி நடிகர்களின் இது வரையிலான பல்வேறு வசூல் சாதனையை முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தியேட்டரில் இந்தப் படத்துக்கு கூட்டம் குறையாததால் ஆஹா என்ற ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்த இந்தப் படத்தை தள்ளி வைத்துள்ளனர்.

தமிழ், மலையாளம்
இதையடுத்து இந்தப் படம் தமிழ், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகிறது. நேரடி தெலுங்கு படத்துக்கும் தமிழ், மலையாளத்தில் வரவேற்பு இருந்ததால், டப் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி டப்பிங் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











