தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ரவிதேஜா - எத்தனை விமர்சனம் வந்தாலும் அசராத அட்லி

Recommended Video

தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ரவிதேஜா-வீடியோ

சென்னை: விஜய் நடிப்பில் அட்லீயின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தின் அதிகாரபூர்வ தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு படவுலகின் முன்னணி கதாநாயகனான ரவிதேஜா நடிக்கப்போகிறார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரவிதேஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். இதனைப்பார்த்த விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் தான் தெறி. அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள பாசத்தை மிக அழகாக படமாக்கி அதனை ஆக்சன் கலந்த கதையுடன் சொல்லிருப்பார். அதையும் தாண்டி கதையில் பல சுவாரஸ்யமான விசயங்களும் இருக்கும். இந்த படம் வெளியான போது அட்லீ மீது பலரும் விமர்சனங்களை வைத்தனர்.

Ravi Teja will be acting in Theri Telugu Remake

தெறி படம் விஜயகாந்தின் சத்ரியன் பட சாயலில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினர். தற்போது தெறி படம் ரீமேக் செய்தி அட்லியை பிடிக்காதவர்களுக்கு பதில் சொன்னது போல் உள்ளது என சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன.

அதே நேரத்தில் தற்போது பிகில் படத்தில் விஜய்யின் ஒரு ஸ்டைல் ரவி தேஜா படத்தில் இருந்து திருடியது என்று சமூக வலைதளங்களில் சிலர் அட்லீயை விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும், தற்போது விஜய்-அட்லீ கூட்டணியில் வந்த தெறி படத்தில் ரவி தேஜா நடிக்க இருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

ரவிதேஜா தெலுங்கு சினிமாவின் மிக முக்கிய நடிகர். இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ரவிதேஜா விஜய் பட ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார் ரவி தேஜா.

என்னதால் அட்லீ மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அவர் வளர்ந்து கொண்டே இருப்பது சினிமா வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். ஏனெனில், அட்லீ தனது அடுத்த படத்தை இந்தியில் ஷாருக்கானை வைத்து எடுக்க உள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X