ஹீரோயின் பாக்கெட்ல கண்டபடி கை வைக்கும் ரவி தேஜா.. இதுதான் டான்ஸ் ஸ்டெப்பா.. விளாசும் நெட்டிசன்கள்!
ஹைதராபாத்: சுறா படத்தில் விஜய் தமன்னாவின் பேன்ட்டை கீழே இறக்குவது போன்ற ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடும் போதே அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், பல வருடங்கள் கழித்து தெலுங்கு நடிகரான ரவி தேஜா இளம் நடிகை பாக்யஸ்ரீ போஸ் உடன் படு மோசமான டான்ஸ் ஸ்டெப்பை போட்டு இருக்கிறாரே என தொடர்ந்து ரவி தேஜாவை சோஷியல் மீடியாவில் டார்கெட் செய்து தாக்கி வருகின்றனர்.
ஹாலிவுட் படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் வயது வித்தியாசமின்றி நடிகர்களும் நடிகைகளும் உடலுறவு செய்வது போன்ற காட்சிகளில் நடிப்பதையே வாயை பிளந்துக் கொண்டு ரசிகர்கள் பார்த்து ஃபயர் விட்டு வருகின்றனர்.

அதே போன்ற வெப்சீரிஸில் டோலிவுட் நடிகர் ராணா டகுபதி நடித்ததும் அவரை கடந்த ஆண்டு வச்சு செய்த நெட்டிசன்கள் கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட ஓடிடி தொடராகவும் அதையே மாற்றி வைத்தது தான் ஆச்சர்யத்தின் உச்சம்.
56 வயசு நடிகரும் 25 வயது நடிகையும்: 'மிஸ்டர் பச்சன்' எனும் டைட்டிலில் உருவாகியுள்ள ரவி தேஜாவின் படத்திற்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. 56 வயது ஹீரோவுக்கு 25 வயது ஹீரோயினா? என்றும் இளம் நடிகையுடன் இப்படியா ஓவர் நெருக்கமாக நடிப்பது என ரவி தேஜாவை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் போட்டு வெளுக்கும் பேரில் பலரும் அந்த வீடியோவை அதிகம் பரவ செய்து வருகின்றனர்.

பாக்கெட் சாங்: இந்நிலையில், அடுத்து தற்போது வெளியான பாடல் ஒன்றை பார்த்த ரசிகர்கள் பாக்கெட் சாங் என்றே அதற்கு பெயர் வைத்து, பாக்யஸ்ரீ போஸின் பேன்ட் பாக்கெட்டில் எப்படியெல்லாம் கண்டபடி கை வைத்து ரவி தேஜா டான்ஸ் ஆடுகிறார் என்றும் இதுக்குப் பேருதான் டான்ஸ் ஸ்டெப்பா என்றும் கேட்டு விளாசி வருகின்றனர்.
முகத்தையே காட்டல: மேலும், அந்த பாடலில் நடிகை பாக்யஸ்ரீ போஸின் முகத்தைக் கூட காட்டாமல் அவரது கட்டழகை மட்டுமே ஜூம் செய்தும், க்ளோஸ் அப் ஷாட்களை வைத்தும் காட்டியுள்ளனர் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். ரவி தேஜாவின் மிஸ்டர் பச்சன் படத்துக்கு எப்படியோ நெகட்டிவ் பப்ளிசிட்டி அதிகரித்து வருவதும் படத்தை பார்க்கும் ஆவலை இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிடும் என்கின்றனர்.
டோலிவுட் vs கோலிவுட் சண்டை: நடிகர் விஜய் ராஷ்மிகா மந்தனாவுடன் கவர்ச்சியாக ஆடவில்லையா என்றும் ரஜினிகாந்த் எல்லாம் எத்தனை இளம் நடிகைகளுடன் கவர்ச்சியாக நடித்தும் நடனமாடியும் இருக்கிறார் என்றும் டோலிவுட் vs கோலிவுட் சண்டையையும் இந்த பாக்கெட் சாங் பாடல் காட்சியை வைத்து ஒரு தரப்பினர் கிளப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











