பிரசாந்தின் 'என்ன விலை அழகே' பூஜையில் 'தல' அஜித்.. வைரலாகும் ரவிவர்மன் வெளியிட்ட த்ரோபேக் போட்டோ!

By

சென்னை: பிரசாந்தின் என்ன விலை அழகே படத்தின் அஜித் கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

சினிமா தொழில் மொத்தமாக முடங்கியுள்ளது. தயாரித்து முடிக்கப்பட்டுவிட்ட படங்களை ஓடிடி-யில் வெளியிட்டு வருகின்றனர் சில தயாரிப்பாளர்கள்.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் என்ன செய்வது என்று தெரியாமல், சினிமா படங்கள் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். இயக்குனர்கள், ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்த, நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தை செலவழித்து வருகின்றனர். பல நடிகைகள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

சிலர் தங்களது த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரோபேக் போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் ரவிவர்மனுடன் நடிகர் அஜித், முரளி ஆகியோரும் உள்ளனர். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமான அஜித் ரசிகர்கள் கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

என்ன விலை அழகே

என்ன விலை அழகே

இந்த போட்டோ, என்ன விலை அழகே படத்தின் பூஜையில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்தார். இந்தி நடிகை அமிஷா படேல், ரகுவரன், மணிவண்ணன் உள்பட பலர் நடித்த படம் இது. ராஜ்கபூர் இயக்கினார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். இந்தப் படத்தின் பூஜை பிரமாண்டமாக நடந்தது. அப்போது அர்ஜூன், அஜித், முரளி உள்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.

அஜித்தின் வாலி

அஜித்தின் வாலி

அந்த புகைப்படத்தில் ஒன்றைதான் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இப்போது வெளியிட்டுள்ளார். இப்போது இந்தி, தமிழில் மோஸ்ட் வான்டட் கேமராமேனாக இருக்கும் ரவிவர்மன், அஜித்தின் வாலி படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாக வேண்டியது. ஆனால், பெப்சி ஸ்டிரைக் காரணமாக ஒரே நாள் ஷூட்டிங்கில் மட்டும் அவர் பங்குபெற்றார். பிறகு அவர் அதில் பங்குபெற முடியாமல் போய்விட்டது.

திருமணத்துக்கு உதவி

திருமணத்துக்கு உதவி

அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ரவிவர்மன். அப்போதிருந்தே அவர் அஜித்துடன் நட்பாக இருக்கிறார். ரவிவர்மனின் காதல் திருமணத்துக்கு உதவியவரும் அஜித்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X