கன்னடத்திலும் ரீமேக் ஆகும் த்ரிஷ்யம் - ரவிச்சந்திரனை வைத்து இயக்குகிறார் பி வாசு!
மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை பி வாசு இயக்க, வீ ரவிச்சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார்.
மலையாளத்தில் பெரும் வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் படத்தை பல மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்கிறார்கள்.
தமிழில் கமல்ஹாஸன் நடிக்க, ஒரிஜினல் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்குகிறார்.

வெங்கடேஷ்
இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பவர் வெங்கடேஷ். இந்தியிலும் படத்தை ரீமேக் செய்யப் போவதாக ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார்.

கன்னடத்தில்
இந்த நிலையில் கன்னடத்தில் இந்தப் படத்தை ரீமேக் செய்கிறார் இயக்குநர் பி வாசு. ஆப்தமித்ரா, ஆப்தரக்ஷகா போன்ற பெரிய வெற்றிப் படங்களை கன்னடத்தில் தந்தவர் வாசு.

வீ ரவிச்சந்திரன்
இதில் ஹீரோவாக வீ ரவிச்சந்திரன் நடிக்கிறார். ஏற்கெனவே சின்னத் தம்பி, துள்ளாத மனமும் துள்ளும், காதல் கோட்டை போன்ற படங்களின் ரீமேக்கில் நடித்து வெற்றி கண்டவர் ரவிச்சந்திரன்.

மீனா
ரவிச்சந்திரன் ஜோடியாக, மலையாள த்ரிஷ்யத்தில் நடித்த மீனாவே நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











