புது பொண்டாட்டி..புது கார்..மனுஷன் வாழ்றாய்யா..ஊர் சுத்தும் ரவீந்தர் மகாலட்சுமி!
சென்னை : சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
செப்டம்பர் 1ந் தேதி நடந்து முடிந்த இவர்களுடைய திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் ஆன பின்பும் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இவர்கள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் இவற்றை பற்றி எல்லாம் கவலைக்கொள்ளாமல் இருவரும் ஜாலியா உருகி உருகி காதலித்து வருகின்றனர்.

ரவீந்தர், மகாலட்சுமி
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி திருமணம் திருப்பதியில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமண போட்டோவை ரவீந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போது அது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் டிராண்டானது. போட்டோவை பார்த்த பலருக்கு அதிர்ச்சி என்றால், சிலர் பொறாமையால் புலம்பினர்.

மாறி மாறி பேட்டி
இதையடுத்து, இருவரும் பல ஊடகங்களுக்கு இணைந்து பேட்டி கொடுத்து, இன்னும் பிரபலமானார்கள். நானும் மகாலட்சுமியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தோம் ஆனால், மகாலட்சுமிதான் செப்டம்பர் மாதமே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தார் என்றார்.

தரமான தல தீபாவளி
பல ஊடங்களுக்கு பேட்டி கொடுத்து களைத்துப்போன இந்த ஜோடி, இனி பேட்டி கொடுக்க மாட்டோம் என முடிவு செய்தனர். இருந்தாலும், ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில தொடர்ந்து மனைவியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இன்ஸ்டாவை தெறிக்கவிட்டு வருகிறார். சமீபத்தில் ரவீந்தர் மருத்துவமனையில் இருப்பதாகவும், தலை தீபாவளி அதுவுமா இப்படியான ஒரு செய்தி பரவியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பட்டாசு வெடித்து தலைதீபாவளி கொண்டாடிய போட்டோவை பதிவிட்டு இருந்தார் ரவீந்தர்.

பெரிய அதிர்ஷ்டம்
இந்நிலையில், ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,புது கார் வாங்கியதை மகிழ்ச்சியாக கூறியுள்ளார். மேலும், வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா... அது பெரிய அதிர்ஷ்டம். அப்படி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா..New wife, new life,new car..drive easy and be crazy என பதிவிட்டுள்ளார். புது கார் வாங்கிய இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











