3 மாசம் தாங்காதுன்னு சொன்னாங்க.. ஒரே டைவர்ஸ் பேச்சு.. சூப்பரா திருமண நாளை கொண்டாடும் மகாலட்சுமி!
சென்னை: கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை விட அதிகமாக பேசப்பட்ட திருமணமே எங்களுடைய திருமணம் தான் என ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி சொல்லியிருந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறோம் என சூப்பர் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளனர்.
இவங்களுக்கு எப்படி திருமணம், பணத்துக்கு ஆசைப்பட்டு மகா போயிருப்பா, 3 மாசம் தாங்காதுன்னு ஏகப்பட்ட பேச்சுக்கள், யூடியூபை திறந்தால் ரெண்டு பேருக்கும் சண்டை, பிரிஞ்சிட்டாங்க, டைவர்ஸ் வாங்கிட்டாங்கனு பார்க்கும் போதெல்லாம் பயங்கர கோவம் வரும்.

ஆனால், அதையெல்லாம் என் அம்மு தன் காதலால் மாற்றி எனக்கு கிடைத்த வரமாக மாறிவிட்டார் என ரவீந்தர் தற்போது பதிவிட்டுள்ள முதலாம் ஆண்டு திருமண நாள் போஸ்ட் டிரெண்டாகி வருகிறது.
தயாரிப்பாளருடன் விஜே மகா திருமணம்: பொதுவாக நடிகைகள் தொழிலதிபர் அல்லது தயாரிப்பாளர்களை அதிகம் திருமணம் செய்து கொள்வார்கள். பணக்காரனா பார்த்து செட்டில் ஆகிட்டாங்க என்கிற விமர்சனம் எழுவது வழக்கம். அதே போன்ற விமர்சனம் மற்றும் பாடி ஷேமிங் ட்ரோல்கள் என கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் டிவி நடிகை மகாலட்சுமிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்ற புகைப்படங்கள் வெளியான நிலையில், சோஷியல் மீடியாவே தீப்பற்றி எரிந்தது.
நயன்தாரா திருமணத்தை ஓவர்டேக் பண்ணிட்டோம்: நயன்தாரா - விக்னேஷ் திருமணம் பற்றிய பேச்சுக்களை விட எங்களுடைய திருமணம் குறித்த பேச்சுக்களும், ட்ரோல்களும் தான் சோஷியல் மீடியாவில் அதிகளவில் உள்ளதாக கடந்த ஆண்டே ரவீந்தர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தனது மனைவியுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்ட அவர் நீண்ட ஒரு பதிவையும் போட்டு ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சொதப்பல் சமையல்: மனைவி மகாலட்சுமி தன்னை உயிருக்கு உயிராக நேசித்து காதல் மழை பொழிகிறாள் என்றெல்லாம் சொன்ன ரவீந்தர் சைக்கிள் கேப்பில் மகாலட்சுமியின் சமையல் ரொம்ப மோசமாக இருக்கு என்பதையும் குத்திக் காட்ட, அதற்கு அம்மு என்னை நீ மொத்தமா டேமேஜ் பண்ணிட்ட, ஆனாலும், நான் தொடர்ந்து சமைக்கிறதை நிறுத்த மாட்டேன் என கமெண்ட் போட்டுள்ளார்.
வாழ்த்தும் ரசிகர்கள்: மீடியாவுக்கு முன்னாடி இருவரும் விவாகரத்து செய்து விட்டோம் என்றெல்லாம் பேசுவோம்னு ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தது கஷ்டமாக இருந்தது என ரவீந்தர் உருகி பதிவிட்டுள்ள நிலையில், அதையெல்லாம் நீங்க கவலைப்படாதிங்க, குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை.. இனிய திருமண நாள் வாழ்த்துகள் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











