ராஜ்கிரணுக்கு பல லட்சம் கொடுத்தேன்.. பணத்தை கேட்டா கொடுக்கல.. பகீர் கிளப்பிய ரவீந்தர் சந்திரசேகரன்!
சென்னை: நடிகர் ராஜ்கிரணுக்கு தான் பணம் கொடுத்திருந்ததாகவும், தான் சிறைக்குச் செல்லும் சூழலில் சிக்கியிருந்த நேரத்தில் பணத்தை கேட்டு மெசேஜ் பண்ண அவர் உதவவே இல்லை என ரவீந்தர் சந்திரசேகரன் பகீர் கிளப்பி உள்ளார்.
சுமார் 16 கோடி ரூபாயை சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளரிடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும் லிப்ரா நிறுவன தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி செய்து ஏமாற்றி விட்டதாக புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், ஜாமினில் வெளியே வந்துள்ள ரவீந்தர் தான் சிறைக்கு செல்லும் நிலையில், நடிகர் ராஜ்கிரணிடம் உதவி கேட்டும் அவர் செய்யவில்லை என திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
ராஜ்கிரணுக்கு அட்வான்ஸ்: தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் 4 படங்களை தயாரித்து வருவதாகவும், அதில் பல நடிகர்களுக்கு சம்பளம் மற்றும் அட்வான்ஸ் கொடுத்த நிலையில் தான் தன்னிடம் வாங்கிய 16 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என அவர் மீது புகார் அளித்ததாக அவரே பேட்டியில் கூறியுள்ளார். ஆனால், ஈஸ்வரன் பட தயாரிப்பாளர் பணத்தை வாங்கி எந்த நடிகருக்கு கொடுத்தேன் என ஏதாவது சான்று அவரிடம் இருக்கிறதா என்று கேட்டு விளாசி உள்ளார். மேலும், படம் எடுப்பதற்காக பலரிடம் ஃபைனான்ஸ் வாங்கியதும் கடனில் இருப்பதும் உண்மை தான் என்றும் நடிகர் ராஜ்கிரண் ஒரு படத்தில் நடிக்க பல லட்சம் ரூபாயை அட்வான்ஸாக கொடுத்துள்ளேன் என்றும் கூறினார்.

ராஜ்கிரண் உதவவில்லை: இக்கட்டான சூழலில் என்னை கைது செய்து உள்ளே வைக்கப் போவதை அறிந்து கொண்டு நடிகர் ராஜ்கிரணிடம் அட்வான்ஸாக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் படி கேட்டிருந்தேன். ஆனால், அவர் திருப்பித் தரவில்லை என மெசேஜையும் காட்டி பகீர் கிளப்பி உள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.
ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸாக வாங்கிய தொகையை நடிகர்கள் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனால், தயாரிப்பாளர் தலையே ஆபத்தில் இருக்கும் போது, அவசரத்துக்கு கேட்கும் போதும் அவர் கொடுக்காதது தனக்கு வருத்தம் தான் என்றும் ரவீந்தர் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











