மகாலட்சுமியை எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது.. கண்கலங்கி பேட்டி கொடுத்த ரவீந்தர்.. முழு விளக்கம்!

சென்னை: சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை தயாரித்த பாலாஜி கப்பா தான் தன் மீது வழக்கு தொடுத்தார் என்றும் தான் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என ரவீந்தர் சந்திரசேகரன் பரபரப்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ரவீந்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இரு முறை ஜாமீன் கேட்டு மனு அளித்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பிணைத் தொகை கொடுத்து தற்போது ஜாமினில் விடுதலை ஆகி உள்ளார் ரவீந்தர் சந்திரசேகர்.

Ravindar Chandrasekaran cried and opens everything about his fraud case

பாலாஜி கப்பாவின் புகைப்படத்தையும் காட்டி அவருக்கு தனக்கும் என்ன தொடர்பு, தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளிக்கும் இந்த விவகாரத்தில் என்ன தொடர்பு என ஏகப்பட்ட விஷயங்களை அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

மகாலட்சுமியை எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது: என் அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமி எனக்கு கிடைத்த வரம், எங்கிட்ட இருந்து மகாலட்சுமியை யாராலும் பிரிக்க முடியாது. ஹேட்டர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் என கெட்ட வார்த்தைகளை போட்டு திட்டி அந்த பேட்டியில் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தி உள்ளார்.

கண்கலங்கிய ரவீந்தர்: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லும் போது, எப்படி உட்காருவ, எப்படி எந்திருப்ப என மகா கேட்கும் போது நொறுங்கிப் போயிட்டேன். என் உடல் மற்றவர்கள் உடல் போல அப்படியெல்லாம் ஈடு கொடுக்காது. எவ்ளோ எடுத்து சொல்லியும் கைது செய்து கொண்டு சென்று விட்டனர் என்று கதறி அழுதார்.

Ravindar Chandrasekaran cried and opens everything about his fraud case

மோசடி செய்யவில்லை: திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என ஏமாற்றி 15. 73 லட்சத்திற்கு தான் என் மீது அவர் புகார் அளித்திருந்தார். ஆனால், எல்லோரும் ரவுண்டா 16 கோடியாக மாற்றி விட்டார்கள். நான் எந்த மோசடியும் செய்யவில்லை. அவருடைய பல திருட்டுத்தனம் மற்றும் தப்பான தொழில் செய்வது பற்றி நான் தெரிந்து கொண்டதும் விலகி விட்டேன். அதன் காரணமாகத்தான் என் மீது அபாண்டமான பழியை போட்டு இப்படி என்னை வஞ்சம் தீர்க்க பார்த்து வருகிறார். இனிமேல், அவரை சும்மா விட மாட்டேன். அவருடைய அனைத்து வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றப் போகிறேன் என கொதித்தெழுந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X