சண்டி ஹோமம் செய்த ரவீந்தர் -மகாலட்சுமி தம்பதி.. எதுக்காகன்னு பாங்கலாங்களா?
சென்னை : தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்டனர்.
இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் இந்த ஜோடி எதிர்கொண்டது. பணத்திற்காகவே மகாலட்சுமி, ரவீந்தரை திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை சிறப்பான வகையில் எதிர்கொண்டு, பொறுமையாக அவை அனைத்திற்கும் பதில் அளித்தனர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி.

ரவீந்தர் -மகாலட்சுமி தம்பதி
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சும் இருவரும் இரண்டு ஆண்டுகள் காதலித்து கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், கோயிலில் எளிமையான வகையில் நண்பர்கள் மற்றும் குறிப்பிட்ட உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. தன்னுடைய வாழ்க்கையில் மகாலட்சுமியே வந்துவிட்டதாக ரவீந்தர் கொண்டாடினர்.

கடுமையான விமர்சனங்கள்
ஆனால் இவர்களை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடாத விமர்சகர்கள், காசுக்காக மட்டுமே ஃபேட் மேன் எனப்படும் ரவீந்தரை, மகாலட்சுமி திருமணம் செய்துக் கொண்டதாக விமர்சித்தனர். இந்த விமர்சனங்களை பொறுமையாக எதிர்கொண்ட ரவீந்தர் மற்றும் மகாட்சுமி இருவரும், அனைத்து தரப்பினருக்கும் தங்களது காதலை வெளிப்படுத்தினர். தற்போது இவர்களது திருமணம் முடிந்து 6 மாதங்கள் கடந்த நிலையில், இருவரும் இணைந்து திருமண நாள் வாழ்த்துக்களை கூறிக் கொண்டனர்.

விரைவில் சீரியல் தயாரிப்பு
தற்போது சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்துவரும் மகாலட்சுமி, விரைவில் அதை முடித்துக் கொண்டு சீரியல்கள் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாகவும், ரவீந்தருக்கு தயாரிப்புப் பணிகளில் உதவியாக இருக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் முன்னதாகவே கேமிராவை பிக்ஸ் செய்துவிடுவார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில் இருவரும் செல்லும் இடங்களின் அப்டேட் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சண்டி ஹோமம் நடத்திய ஜோடி
இந்நிலையில் தற்போது தன்னுடைய வீட்டில் சண்டி ஹோமத்தை நடத்தியுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர். இந்த ஹோமத்தின் காட்சிகளையும், ஹோமத்தில் மகாலட்சுமி பங்கேற்றுள்ளதையும் வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சண்டி ஹோமம் மூலம் தங்கள் மீது அதிகமான நம்பிக்கை மற்றும் அன்பை வைத்துள்ளவர்களுக்காக தாங்கள் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏராளமான பாலோயர்கள்
தொடர்ந்து உருவக்கேலிக்கு உள்ளாகி வருகிறார் ரவீந்தர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய வாழ்க்கையை இயல்பாக எதிர்கொண்டு வருகிறார். அனைவருக்கும் அவரது பதில் சிரிப்பாக உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்தே பொதுவெளிகளில் பல நிநகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை தனியாகவும் கூட்டாகவும் இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இவர்களை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பாலோ செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











