சொர்க்கம் பூமியில் தான் இருக்கு..கருத்த கன்னத்தில் நச்சுனு முத்தம்.. உருகிப்போன ரவீந்தர்!

சென்னை : காதல் மனைவி நச்சுனு கன்னத்தில் கொடுத்த முத்தத்தால் ரவீந்தரன் உருகி உள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்தரன் மற்றும் மகாலட்சுமிக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மிகவும் ரகசியமாக இவர்களது திருமணம் திருப்பதியில் நடந்தது. இன்ஸ்டாகிராம் இவர்களின் திருமண படத்தை தெரிந்த பிறகே இவர்களுடைய திருமண செய்தி அனைவருக்கும் தெரிந்தது.

ரவீந்திரன்,மகாலட்சுமி

ரவீந்திரன்,மகாலட்சுமி

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு மாதம் முடிவடைந்து விட்ட பின்னரும், தற்போது வரை ஹாட் டாப்பிக்காக இவர்களில் திருமணம் பற்றிய பேச்சுத்தான் சோஷியல் மீடியாவில் உள்ளது. இந்த இளம் ஜோடியும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஜாலியா வெளிநாட்டுக்கு ஹனிமூனுக்கு போகாமல் அனைத்து ஊடகங்களுக்கும் வளைத்து வளைத்து பேட்டி கொடுத்தனர்.

ட்ரோல் செய்த ஃபேன்ஸ்

ட்ரோல் செய்த ஃபேன்ஸ்

இவர்களின் திருமணத்தால் ஷாக்கான மகாலட்சுமி ஃபேன்ஸ் பலரும் இவர்களை ட்ரோல் செய்தனர். இது பணத்திற்காக நடந்த திருமணம், ரவீந்தர் மகாலட்சுமியை மிரட்டி திருமணம் செய்து கொண்டார் என பல வதந்திகள் பரவின. ஆனால், இருவரும் இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்தாக கூறி மேலும் அதிர்ச்சி அளித்தார்.

ஒரு மாசம் ஆச்சு

ஒரு மாசம் ஆச்சு

இதையடுத்து,சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியில் வந்தாள் மகாலட்சுமி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலகலப்பாக பல கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர் இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் வைரல் ஆனது. கடந்த 1 ந் தேதி திருமணமாகி ஒரு மாதம் முடிந்துள்ளதை கொண்டாடும் வகையில் கோவில் இருந்து செல்ஃபி எடுத்திருந்தனர்.

நச்சுனு முத்தம்

நச்சுனு முத்தம்

இந்நிலையில், ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனைவி தனக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த பதிவுக்கு கேப்ஷனாக, சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பதவிக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன. இன்னும் சிலர் என்னைய்யா இப்படி கடுப்பேத்துற என்று கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X