எங்களை கிண்டல் செய்ய காரணம் இதுதான்..திருமண சர்ச்சை குறித்து ஓபனா பேசிய ரவீந்தர், மகாலட்சுமி!

சென்னை : சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் வி ஜே மகாலட்சுமி. விஜேவாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்த மகாலட்சுமி தற்போது நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவர்களுடைய திருமணம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வரட்டும். என எதைபற்றியும் கவலைப்படாமல் அந்த ஜோடி ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.

தயாரிப்பாளர் ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் செப்டம்பர் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்கள் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் இந்த புதுமண ஜோடி பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளன.

இரண்டு வருட காதல்

இரண்டு வருட காதல்

அந்த பேட்டியில், நானும் மகாலட்சுமியும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தோம் ஆனால், மகாலட்சுமி, தலை தீபாவளிக்காக இந்த மாதம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அதனால், தற்போது திருமணம் நடந்துள்ளது இது அவசரப்பட்டு நடந்த திருமணம் இல்லை.

எனக்கும் இது இரண்டாவது திருமணம்

எனக்கும் இது இரண்டாவது திருமணம்

மேலும், இது மகாலட்சுமிக்கு மட்டும் இரண்டாவது திருமணம் அல்ல,எனக்கும் இது இரண்டாவது திருமணம் தான். நான் என் திருமணம் குறித்து யாரிடமும் பேசியது இல்லை. மகாலட்சுமிக்கு அவரது கணவரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து கிடைத்து விட்டது. மேலும், அவள் மகனிடம் அனுமதி கேட்டுத்தான் இந்த திருமணத்தை செய்து கொண்டாம்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

சோஷியல் மீடியாவில் எங்களை கிண்டலடிக்க காரணம் நான் தயாரிப்பாளர் என்பதால் அல்ல, நான் குண்டாக இருப்பதால் இது பொருத்தமான ஜோடி இல்லை என்று கிண்டலடிக்கிறார்கள். எங்களுக்கு பிடித்திருக்கிறது இதில் நாங்கள் வேறு யாருக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.மேலும், நான் மகாலட்சுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் உண்மை இல்லை என்றார்.

என் குழந்தைக்காக

என் குழந்தைக்காக

இதையடுத்து, பேசிய மகாலட்சுமி, என் முதல்கணவருக்கு திருமணமாகி விட்டதால், எனக்கும் நிறைய வரன்கள் வந்தன அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னையும், என் குழந்தையையும் பார்த்துக் கொள்ளும் ஒருவரை நான் தேடிக்கொண்டு இருந்தேன் அப்போது தான் இவர் கிடைத்தார் என்றார். மேலும், விரைவில் இருவருக்கும் ரிசப்ஷன் நடைபெறும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X