Don't Miss!
- Technology
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- News
"அதிமுகவினர் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது" - சசிகலா
- Finance
அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் 6ல் இவங்களா?.. திருமணமான கையோடு அங்க போறாங்களா? இது சரியா வருமா?
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ல் இணையத்தை திணறவிட்ட புதுமண தம்பதிகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பகும் நிகழ்ச்சிகளில் அதிகம் ரசிகர்களைக் கவர்ந்த நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ்.
இதுவரை 5 சீசன்கள் கடந்த இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் அக்டோபர் 2-ந் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகின்றது. இதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகியாகி வருகிறது.
சட்டையை
கழட்டி..சிக்ஸ்
பேக்கை
காட்டிய
ஷாருக்கான்..உங்களால்
இத
பண்ண
முடியுமா!

விஜய் டிவி பக்கா பிளான்
பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளதால், அதற்காக செட் அமைக்கும் பணி,போட்டியாளர்கள் தேர்வு என அனைத்து வேலைகளையும் விஜய் டிவி பக்காவாக செய்து வருகிறது. கடந்த சீசனில் அறிமுகமே இல்லாதவர்கள் கலந்து கொண்டதால், சீசன் 5 நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் இடையே போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

சுவாரசியத்தை கூட்ட
இதனால், இந்த முறை போட்டியாளர்களை தேர்வு செய்வதில் பக்காவாக பிளான் போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்ட என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து வருகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி ஆகியோர் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டார்கள்.

சர்ச்சை நடிகை
அதேபோல் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான ரோஷினி, ராஜா ராணி சீரியல் வில்லி அர்ச்சனா, தர்ஷா குப்தா, சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீ நிதி மற்றும் நடிகை ஷில்பா மஞ்சுநாத், நடிகை மனிஷா யாதவ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

எகுறும் எதிர்பார்ப்பு
இந்நிலையில், அண்மையில் திருமணம் செய்து கொண்டு இணையத்தையே திணறவிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமியும் ஜோடியாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், யூடியூப்ல மட்டும் பாத்தா எங்கள, விரைவில் டிவில பாருங்க. அதுவும் விஜய்டிவில பாருங்க என்று ஒரு பதிவு வைரலாகி உள்ளது. இதனால், இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போறாங்களா என கேட்டு வருகின்றனர்.

டிஸ்னி பிளஸ் ஸ்டாரிலும்
இந்த பிக்பாஸ் சீசன் 6ல் சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல், மிகவும் தாறுமாறாக இருக்க போகிறது.வழக்கம் போல சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம்போல் அரை மணி நேரம் முன்னதாகவே 9.30 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாக போகிறது. ஏற்கனவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஸ்டாரிலும் ஒளிபரப்பாகிறது.