Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 29 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்...
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரவீந்தர் இதுவரைக்கும் ஐ லவ் யூ சொன்னதே இல்லை.. உண்மையை போட்டுடைத்த மகாலட்சுமி!
சென்னை : கடந்த செப்டம்பர் 1ம் தேதி திருமணம் முடித்ததில் இருந்து தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே உள்ள ஜோடி ரவீந்தர் -மகாலட்சுமி.
திருமணத்தை தொடர்ந்து ஹனிமூன், விருந்து என பிசியாவார்கள் என்று பார்த்தால், பேட்டி கொடுப்பதிலேயே இவர்களின் நாட்கள் கழிந்தது.
தற்போது விஜய் டிவியின் வந்தாள் மகாலஷ்மியே நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பங்கேற்றுள்ளனர். இதன் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
“பிரைவேட்
ஜெட்ல
ஹனிமூன்
போறோம்”:
Wanted-ஆக
வந்து
வண்டியில்
ஏறும்
லிப்ரா
ரவி,
மகாலட்சுமி
ஜோடி

ரவீந்தர் -மகாலஷ்மி ஜோடி
கடந்த செப்டம்பர் 1ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமியின் திருமணம் நெருங்கிய சுற்றத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, தன்னுடைய திருமணப் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டார் ரவீந்தர்.

ட்ரெண்டிங்கில் ஜோடி
இதுதான் தாமதம் என்று மீடியாக்கள் இவர்களை சூழ்ந்துக் கொண்டன. பல்வேறு கேள்விகளுடன் வலம் வந்தன. மகாலட்சுமி பணத்திற்காகத்தான் ரவீந்தரை திருமணம் செய்துக் கொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விக்கணைகளால் துளைத்தனர். அனைத்திற்கும் சளைக்காமல் பதிலளித்தது இந்த தம்பதி.

தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி
தொடர்ந்து இவர்கள் கொடுக்கும் பேட்டிகள், பகிர்ந்த சமூக வலைதளப் பதிவுகள், இவர்களின் பயணங்கள், செய்கைகள் என அனைத்தும் ட்ரெண்டாகின. இதையடுத்து தற்போது தாலி பிரித்துக் கோர்க்கும் நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது. இதன் புகைப்படங்களை பகிர்ந்த ரவீந்தர் மாஞ்சா கயிறிலிருந்து திருமாங்கல்யம் என்று கேப்ஷனில் தெரிவித்திருந்தார்.

வந்தாள் மகாலஷ்மியே நிகழ்ச்சி
இதனிடையே இவர்கள் இருவரும் தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ள வந்தாள் மகாலஷ்மியே என்ற நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஐ லவ் யூ சொல்லாத ரவீந்தர்
நிகழ்ச்சியின் இடையில் பேசிய மகாலட்சுமி இதுவரை ரவீந்தர் ஐ லவ் யூ சொன்னதேயில்லை என்ற உண்மையை போட்டுடைத்தார். உடனே ஆங்கர் மகேஷ், அவரை ஐ லவ் யூ சொல்ல கேட்க, பூங்கொத்துடன் தன்னுடைய காதலை பகிர்ந்தார் ரவீந்தர். உடனே ஐ லவ் யூ டூ என்று மகாலட்சுமியும் அவரது மார்பில் சாய அங்கே காதல் பூ பூத்தது.

காதல் கவிதை பகிர்ந்த ரவீந்தர்
தொடர்ந்து நிகழ்ச்சியில் காதலுடன் கவிதைகளால் மகாலட்சுமியை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் திணறடித்தார் ரவீந்தர். இந்தப் ப்ரமோவை பகிர்ந்துள்ள விஜய் டிவியும் பிண்றீங்களே சார் என்றே கேப்ஷன் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.