Ravinder Chandrasekar: “போலி ஆவணம்... 16 கோடி பண மோசடி..” தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது!

சென்னை: லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர்.

இவரும் சீரியல் நடிகை மஹாலட்சுமியும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.

இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்றாலும், இந்த ஜோடியின் அலப்பறை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

 Ravinder Chandrasekar: Producer Ravinder Chandrasekar arrested in 16 crore money fraud case

இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது: நட்புன்னா என்னான்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்து பிரபலமானவர் லிப்ரா ரவீந்தர். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ரவீந்தர் சந்திரசேகர், கடந்தாண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணத்திற்குப் பின்னர் ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ட்ரெண்டாகி வந்தனர். மனைவிக்கு புதிய கார் பரிசு, கோயில்களில் வழிபாடு, ஹனிமூன் என ரவீந்தர் - மகாலட்சுமியின் அட்ராசிட்டிகள் தொடர்ந்து வந்தன. இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திடக் கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் எனக் கூறி முதலீடு செய்தால், நல்ல லாபம் தருவதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து 16 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ரவீந்தர் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக அமெரிக்காவில் இருந்து விஜய் என்பவர் புகார் செய்திருந்தார். கடனாக 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரே வாரத்தில் திருப்பித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ரூ.16 கோடி மோசடி செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு குறித்த தகவல்கள் முழுமையாக தெரியவில்லை. ரவீந்தர் சந்திரசேகர் தரப்பில் இருந்து விரைவில் இதுபற்றி விளக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X