நாலு நாள் பார்த்திருந்தா டைவர்ஸ் பண்ணியிருப்பேன்.. இன்ஸ்டாகிராம் லைவில் ரவீந்தர் பகிர்ந்த தகவல்!

சென்னை : பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்டனர்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் ரவீந்தர். இதையடுத்து தற்போது இந்த ஜோடி எங்கு பார்த்தாலும் பேசு பொருளாகியுள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராம் லைவில் வந்த ரவீந்தர் பல விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர் ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தர்

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் சில தினங்களுக்கு முன்பு எளிமையான முறையில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் முன்பு திருமணம் செய்துக் கொண்டர். இதையடுத்து சமூக வலைதளங்களில் தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்தார் ரவீந்தர்.

பேசு பொருளான ஜோடி

பேசு பொருளான ஜோடி

அதுமுதல் இவர்கள் இருவரும் பேசு பொருளாகியுள்ளனர். ஃபேட்மேன் என்று சொல்லப்படும் ரவீந்தரை பணத்திற்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்ததாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதற்காக இல்லை, அவரது அப்ரோச் பிடித்திருந்தது என்று மகாலட்சுமி கதறாத குறையாக சொன்னாலும் அதை ஏற்காமல் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

பிரபலப்படுத்திய திருமணம்

பிரபலப்படுத்திய திருமணம்

இவர்கள் இருவரும் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டனர். ஏற்கனவே பிரபலமானவர்கள்தான் என்ற போதிலும், இந்த திருமணம் இருவரையும் மிகவும் அதிகமான பேட்டிகளை கொடுக்க வைத்துள்ளது. அவர்கள் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த நிலையில், அவர்களது காதல் முதல் திருமணம் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் லைவில் ரவீந்தர்

இன்ஸ்டாகிராம் லைவில் ரவீந்தர்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவில் ரவீந்தர் பேசியுள்ளார். அப்போது பல விஷயங்களை அவர் பகிர்ந்துக் கொண்டார். தன்னுடைய மனைவி தான் நடித்துவரும் அன்பே வா சீரியலை தொடர்ந்து பார்க்க வைப்பதாகவும் இதை மட்டும் தான் முன்பே பார்த்திருந்தால் மகாலட்சுமியை டைவர்ஸ் செய்திருப்பேன் என்றும் அவர் ரசிகர்களிடையே பேசினார்.

கவலைப்பட்ட ரவீந்தர்

கவலைப்பட்ட ரவீந்தர்

தொடர்ந்து பேசிய அவர் ஐயய்யோ, இதையே ஹெட்டிங் ஆக்கிடுவாங்களே என்று பொய்யாக கவலைப்படவும் செய்தார். இந்த லைவின்போது முதலில் ஸ்கிரீன் முன்பு மகாலட்சுமி வரவில்லை. இதையடுத்து அவர் வெட்கப்படுவதாக ரவீந்தர் அவரை கலாய்த்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X