மெகா சீரியல் மாதிரி போகுது.. பெயரை மாற்றியும் ரவிக்கு ‘ஜெயம்’ கிடைக்கலையா?.. தியேட்டரில் ஆள் இல்லை!
சென்னை: கோமாளி படத்திற்கு பிறகு நடிகர் ரவிக்கு ஒரு சோலோ ஹிட் கூட கிடைக்கவில்லை என்பது ரொம்பவே வேதனையான விஷயமாக பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி என நட்சத்திர பட்டாளங்கள் நடித்த பொன்னியின் செல்வன் படம் தான் வசூல் ரீதியாக ஜெயம் ரவிக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட்.
ஆனால், அந்த படத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் பூமி, அகிலன், இறைவன், சைரன் மற்றும் பிரதர் உள்ளிட்ட படங்கள் தோல்விப்படங்களாக மாறின. இந்நிலையில், ஜெயம் ரவி என்கிற பெயரை ரவி மோகன் என மாற்றிய நிலையில், இந்த பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மெகா சீரியல் என கலாய்த்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்களே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ள நிலையிலும், பொதுமக்கள் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள இந்த படத்தை பெரிதாக கொண்டாடவில்லை என்பது தான் அதிர்ச்சியான விஷயமாக மாறியிருக்கிறது.
சொதப்பலான ஓபனிங்: இந்த பொங்கலுக்கு வெளியான ரவியின் காதலிக்க நேரமில்லை படம் முதல் நாளில் வெறும் 2 கோடி ரூபாய் வசூலை மட்டுமே அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய், டிஜே பானு, லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ, லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான இந்த படத்தில் ஓரினச்சேர்க்கை, செயற்கை கருத்தரிப்பு போன்ற பல முற்போக்கான விஷயங்கள் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வசூல் ரீதியாக பொங்கல் அன்று கூட இந்த படத்துக்கு கூட்டம் வராதது தான் ரவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனைவியுடன் விவாகரத்து: மனைவி ஆர்த்தியையும் மகன்களையும் சமீபத்தில் விட்டுப் பிரிந்தது தான் ரவிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்கின்றனர். விவாகரத்து செய்துவிட்டு நடிகர்கள் எப்படித்தான் லவ்வர் பாயாக படங்களில் நடிக்கிறார்களோ என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களில் இருந்து அவர்களது கனெக்ட் கட்டாகிவிடும் என்றும் கூறுகின்றனர்.
மெகா சீரியல்: மேக்கிங், ஒளிப்பதிவு, ஏ.ஆர். ரஹ்மானின் "இழு இழு இழுக்குதடி" அந்த ஒரு பாடல் உள்ளிட்டவை பாசிட்டிவாக இருந்தாலும் ஸ்லோவான மேக்கிங் மெகா சீரியல் போல இருப்பதாக பொங்கலுக்கு படம் பார்க்க சென்ற ரசிகர்களை போரடிக்க வைத்துவிடுகிறது. படத்தில் காதல் காட்சிகளும் இல்லாத நிலையில், லவ் படம் என நம்பி போய் ஏமாந்துவிட்டோம் என்றும் ரசிகர்கள் பப்ளிக் விமர்சனத்தில் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











