Toxic Teaser : ரத்தக் களறியாக 'டாக்ஸிக்' டீசர்.. கேஜிஎஃப்-ஐ மிஞ்சும் வகையில் யஷ்ஷின் அதிரடி ஆட்டம்
சென்னை: நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படமான டாக்ஸிக் படம் வரும் மார்ச் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை கீது மோகந்தாஸ் இயக்கி உள்ளார். படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை வரும் மார்ச் 19ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார்கள் என்பதால் படத்தின் புரோமோசன் வேலையை சிறப்பாக தொடங்கி உள்ளனர். படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். டீசர் முழுக்க ரத்தக் காட்சியாகவே உள்ளது. இதற்கு இடையில் சில படுக்கையறை நெருக்கமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. டீசரைப் பார்க்கும்போது ஹாலிவுட் ரேஞ்ச்க்கு ஒரு கேங்க்ஸ்டர் படமாக இந்த படத்தை உருவாக்கி உள்ளார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

டாக்சிக் படத்தின் கதையைப் பொறுத்தவரை கடந்த 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற கேங்ஸ்டர்கள் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கே.ஜி.எஃப் மற்றும் கே.ஜி.எஃப் 2 என இரண்டு படங்களிலும் யாஷ் தன்னை பக்காவான ஆக்ஷன் கதாநாயகனாக உருமாற்றி பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துவிட்டார். இப்படி இருக்கையில் இவரது நடிப்பில் அடுத்து வெளியாகும் படமும் கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதேபோல் இயக்குநர் கீது மோகஸ்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் கமிட் ஆனார்.
படத்தின் டைட்டில் டாக்சிக் என்று அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது.


Click it and Unblock the Notifications