சொந்தத்தில் பெண்.. தனுஷுக்கு விரைவில் இரண்டாம் திருமணம்? இணையத்தில் பரவும் செய்தி!
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், விவாகரத்து கிடைத்த உடன் தனுஷுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரின் குடும்பத்தினர் முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக பெண் பார்க்கும் வேலையை அவரது அப்பா தொடங்கி இருப்பதாகவும் இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
கஸ்தூரி ராஜாவின் மகனும், செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ் 2004-ம் ஆண்டு, ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்வதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தனுஷ்,ஐஸ்வர்யா பிரிவு: தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் விவாகரத்து கோரி,ஏப்ரல் மாதம் குடும்ப சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபாதேவி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொந்தத்தில் பெண்: இந்நிலையில் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, இப்போதும் எதுவும் கெட்டுவிடவில்லை, இருவரும் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழுங்கள் என தனுஷிடம் பேசி வருகிறாராம். ஆனால், விவாகரத்து முடிவில் தெளிவாக இருப்பதால், மகனின் வாழ்க்கையை நினைத்து வேதனைப்படும் கஸ்தூரி ராஜா, தனுஷூக்கு எப்படியாவது இரண்டாம் திருமணம் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சொந்தத்தில் பெண் தேடி வருவதாகவும், அதில் ஒரு பெண்ணை குடும்பத்தினர் பார்த்து முடிவு செய்துவிட்டதாக செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இரண்டாம் திருமணம் நடக்கும்: ஆனால்,தனுஷின் அண்ணன் செல்வராகன், முதலில் சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து, இரண்டாவதாக கீதாஞ்சலி திருமணம் செய்து கொண்டு, மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இதனால், அண்ணனைப் போல தம்பிக்கும் நிச்சயம் இரண்டாம் திருமணம் நடக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











