Leo: லியோ 2 கன்ஃபார்ம்.. தளபதியோட நடிப்பு பார்த்து மிரண்ட RDX பட நடிகர்.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் கண்டிப்பாக இரண்டாம் பாகம் வெளியாகும் என அந்த படத்தில் நடித்துள்ள ஆர்டிஎக்ஸ் பட நடிகர் சமீபத்திய பேட்டியில் பேசியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் த்ரிஷாவுக்கு அப்பாவாக நடித்திருப்பார் பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி. அஜித்தின் அட்டகாசம், ஜெயம் ரவியின் ஆதி பகவன், அடங்கமறு, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பாபு ஆண்டனி சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் படத்தில் கராத்தே மாஸ்டராக நடித்திருப்பார்.

ஆர்டிஎக்ஸ் பட நடிகர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபு ஆண்டனியும் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தின் காஷ்மீர் போர்ஷன் இதற்கு முன் தென்னிந்திய படங்களில் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாகவும் புதிதாகவும் இருக்கும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்துக்கு இரண்டாம் பாகம் வருவது போலத்தான் இயக்கியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
லியோ படத்தில் சஞ்சய் தத் முதல் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த், மேக்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் நடிகர்களை விட அந்தப் படத்தின் கதை மிகவும் பிரம்மாண்டமானது என்கிற சூப்பரான விஷயத்தையும் அந்த பேட்டியில் பாபு ஆண்டனி கூறியுள்ளார்.

லியோ 2 கன்ஃபார்ம்: லியோ படம் நிச்சயமாக ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை முறியடிக்கும் தன்மை கொண்டது என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், லியோ படத்தில் கமல் இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் காஷ்மீரில் தான் நடித்ததாகவும் கூறியுள்ளார்.
RDX படத்தில் ஆசானாக நடித்திருந்த பாபு ஆண்டனி லியோ படத்திலும் வெறித்தனமான ரோலில் நடித்துள்ள நிலையில், அவரது சமீபத்திய பேட்டி மூலம் விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட அப்டேட்கள் கிடைத்துள்ளன. லியோ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ள நிலையில், அந்த ஒன்றே போதும் படத்திற்கு ப்ரீ புக்கிங் சும்மா தீயாக இருக்க என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











