ஆர்டிஎக்ஸ் லவ்... மெல்லிடை காட்டி கவர்ச்சி தீயை பற்ற வைத்த பாயல் ராஜ்புத்

Recommended Video

RX100 Heroin Payal Rajput about casting couch

சென்னை: காதல் காட்சிகளில் நெருக்கம், முத்தக்காட்சிகளில் தத்ரூபம் என மீண்டும் ரசிகர்களின் மனதில் கவர்ச்சி தீயை பற்ற வைத்திருக்கிறார் பாயல் ராஜ்புத் எல்லாம் ஆர்டிஎக்ஸ் லவ் படத்தில் டீசர் பார்த்த ரசிகர்கள் சொக்கிப் போய் கிடக்கிறார்கள் எல்லாம் பாயல் செய்த மாயம்தான்.

காதல் கதைகளுக்கு எப்போதுமே வரவேற்புதான். 2017ஆம் ஆண்டில் வெளியான அர்ஜூன் ரெட்டி, ஆர் எக்ஸ் 100 ஆகிய படங்கள் செம ஹிட் அடித்தன. அந்த படத்தில் நடித்த பாயல் ராஜ் புத் காட்டிய படு கவர்ச்சி பரபரப்பை பற்றவைத்தது. அவரது இரண்டாவது படம்தான் ஆர்டிஎக்ஸ் லவ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தேஜஸ் நடிக்கிறார். ஷங்கர் பானு இயக்கும் இந்த படத்தின் டீசரும் படு பயங்கரமாக ஹிட் அடித்துள்ளது. கவர்ச்சியாக நடித்த பாயலுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளன. அதுபற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் பாயல்.

RDX Love Teaser Payal Rajput, Tejus Kancherla

நடிகை பாயல் ராஜ்புத்தின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம். இவர் மாடல் அழகியாக அறிமுகமாறி நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்தார். மேலும் தெலுங்கு மற்றும் இந்தி, மராட்டியம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் உருவான டிவி சீரியலில் நடித்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் 'இருவர் உள்ளம்' என்ற படத்தில் நடிகர் வினய்க்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து இவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்தார். அப்படித்தான் ஆர் எக்ஸ் 100 படம் படு ஹிட் ஆகவே கவர்ச்சி பல ரசிகர்களை கவர்ந்து விட்டது. அதற்கடுத்து வெளியாக உள்ள ஆர்டிஎக்ஸ் லவ் படமும் படு பயங்கர கவர்ச்சியாக உள்ளது. இதுவே அவருக்கு பிரச்சினை ஏற்படுத்தி வருகிறது.

RDX Love Teaser Payal Rajput, Tejus Kancherla

சினிமாவில்தான் நான் கவர்ச்சியாக நடித்தேன். நிஜவாழ்க்கையிலும் நான் அப்படித்தான் இருப்பேன் என்று நினைத்து என்னை துரத்துகின்றனர். நிஜவாழ்க்கையில் நானும் அப்படித்தான் இருப்பேன் என்று நினைக்கின்றனர். நான் இந்து என்ற கதாபாத்திரத்திற்காக அப்படி நடித்தேன். இனி அந்த கதாபாத்திரத்தை அழிக்க போராடுவேன். அதற்காக டிஸ்கோ ராஜா, வெங்கி மாமா படங்களில் புதிய கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

படுக்கை அறை காட்சியில் நெருக்கமாக நடித்த தன்னை பலரும் படுக்கைக்கு அழைத்தனர். அப்படி படுத்துதான் வாய்ப்பு பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் பாயல்.

RDX Love Teaser Payal Rajput, Tejus Kancherla

6 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் வேலை பார்த்தேன். அப்போதும் இதே மாதிரி பாலியல் தொல்லைகள் ஏற்பட்டன. மீ டூ இயக்கம் பரபரப்பான பிறகும் படுக்கைக்கு அழைக்கும் தொல்லைகள் குறையாமல் தொடர்கின்றன. சில பெண்கள் தைரியமாக வெளிப்படுத்துகிறார்கள். நானும் இதை வெளியே சொல்வதால் சிலர் என்னை வெறுக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

சரி விடுங்க பாயல்... ஆர்டிஎக்ஸ் லவ் பட்டைய கிளப்ப போகுது நீங்களும் எங்கேயோ போயிருவீங்க.

Read more about: teaser
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X