For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒன்லி ஹீரோதான்..ஆனால் இவர் படத்தில் மட்டும் காமெடியனாக நடிக்க தயார்..யாரைச் சொல்கிறார் சந்தானம்

  |

  சென்னை : சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் நடிகர் சந்தானமும் ஒருவர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் சந்தானம்.படத்தில் தனக்கென தனி காமெடி டிராக் வைத்திருப்பார்.

  Recommended Video

  GuluGulu Movie Review | Yessa ? Bussa ?| GuluGulu | Santhanam |*Review

  பேசாத கண்ணும் பேசுமே படத்தில் விக்ரமின் ஃபிரண்டாக நடித்தார். பிறகு சிம்புவின் காதல் அழிவதில்லை, அலை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் மன்மதன், சச்சின் போன்ற படங்களுக்கு பிறகு தான் சந்தானம் அனைவருக்கும் தெரிந்த நடிகரானார்.

  அறை எண் 305 ல் கடவுள் படத்தில் துவங்கி, தற்போது வரை ஹீரோவாக நடித்த வருகிறார். இவர் நடித்த குலு குலு படம் சமீபத்தில் ரிலீசாகி, எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதைத் தொடர்ந்து ஏஜன்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

  கலர்புல் காம்போவில் புகைப்படங்களை வெளியிட்ட அமலா பால்.. வாழ்க்கையிலும் வண்ணங்களை சேர்க்க விருப்பமாம் கலர்புல் காம்போவில் புகைப்படங்களை வெளியிட்ட அமலா பால்.. வாழ்க்கையிலும் வண்ணங்களை சேர்க்க விருப்பமாம்

  கேப்டன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

  கேப்டன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

  சிம்பு, ஆர்யா போன்ற நடிகர்கள் சந்தானத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். அந்த அடிப்படையில் சந்தானம், ஆர்யாவின் கேப்டன் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் படம் வரும் 8-ம் தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

  டைட்டில் எப்படி வந்தது

  டைட்டில் எப்படி வந்தது

  அதில் நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சந்தானமும் கலந்து கொண்டார்.அதில் பேசிய ஆர்யா கேப்டன் என்ற தலைப்பை பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்திரிடமிருந்து பெற்றதாகவும், சக்தி சவுந்தர்ராஜன் மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்த படத்தில் நடித்தேன் என்றும் கூறினார்.

  மல்டி ஹீரோ படத்தில் நடிப்பதில்லை

  மல்டி ஹீரோ படத்தில் நடிப்பதில்லை

  தொடர்ந்து பேசிய நடிகர் சந்தானம், நான் நாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு மல்டி ஹீரோ கதைகள் மற்றும் கெஸ்ட் ரோலில் நடிக்க பலரும் கேட்டனர். ஆனால் அதை எல்லாம் மறுத்துவிட்டு ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறேன். ஆனால் நடிகர் ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும், நான் அவருடன் இணைந்து நடிப்பேன்.

  அந்த படத்தில் காமெடியனா நடிக்க தயார்

  அந்த படத்தில் காமெடியனா நடிக்க தயார்

  பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் அவருக்கு நிகரான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அனுமதித்தார் ஆர்யா. பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் காமெடியனாக நடிக்க தயாராக உள்ளேன் . படங்களில் ஏதாவது சின்ன புது விஷயமாவது இருக்க வேண்டும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள். அந்த வகையிலான படமாக கேப்டன் இருக்கும் என சந்தானம் நம்பிக்கை தெரிவித்தார்.

  அப்ப அவர் படத்தில் காமெடியனாக நடிக்க மாட்டீர்களா?

  அப்ப அவர் படத்தில் காமெடியனாக நடிக்க மாட்டீர்களா?

  சந்தானம் இப்படி சொன்னாலும், தன்னை, தனக்கு நிகராக வேடம் கொடுத்து நடிக்க வைத்தவர் உதயநிதி என்று ஒரு மேடையில் சந்தானம் பாராட்டினார். உதய்நிதியின் நட்பு கிடைத்தது தனது பாக்கியம் அது எப்போதும் தொடரும் என சந்தானம் சொன்னார். சந்தானம் படங்களில் கிளாசிக் காமெடி என்றால் உதயநிதியின் படங்களில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் தான். ஆனால் அவர் படத்தில் காமெடியானாக நடிப்பேன் என்று சொல்லாமல் ஆர்யா படத்தில் நடிப்பேன் என்று சொன்னதை ரசிகர்கள் குழப்பத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்

  English summary
  Actor Santhanam says that he is ready to act as a comedian for Boss engira Baskaran 2 with Arya. Some others approach for multi hero projects. But he refused and doing lead roles only. Santhanam now playing lead role in Agent Kannayiram.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X