For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ”காருக்குள் செக்ஸ், நிர்வாண போட்டோ ஷூட்க்கும் ரெடி,”: வாண்ட்டடாக வண்டியில் ஏறும் டோலிவுட் பிரபலம்!

  |

  மும்பை: 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த விஜய் தேவரகொண்டா, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக ஜொலித்து வருகிறார்.

  விஜய் தேவரகொண்டா நடிப்பில் 'லைகர்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

  இந்நிலையில், பாலிவுட் பிரபலத்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் சர்ச்சையாக பேசியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

  19(1)(a) Movie review : புரட்சி எழுத்தாளராக விஜய்சேதுபதி..19(1)(a) படம் எப்படி இருக்கு?19(1)(a) Movie review : புரட்சி எழுத்தாளராக விஜய்சேதுபதி..19(1)(a) படம் எப்படி இருக்கு?

  ரொமண்டிக் ஹீரோ

  ரொமண்டிக் ஹீரோ

  2011 முதல் தெலுங்கு சினிமாவில் ரொமண்டிக் ஹீரோவாக கலக்கி வரும் விஜய் தேவரகொண்டா, 'அர்ஜுன் ரெட்டி' மூவி வெளியான பின்னர், ஓவர் நைட்டில் ஹாட்ஸ்டார் ஆகிவிட்டார். அந்தப் படத்தில் அவரது ஆக்டிங்கும், லவ் சீன்ஸும், ரசிகர்களை செம்மையாக சூடேற்றியது. அவரது ஸ்டைலிஷ் & ரொமண்டிக் ஹீரோயிஷம், தற்போது பக்கா ஆக்சனுக்கும் செட் ஆகிவிட்டது.

  லைகர்

  லைகர்

  தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டோ, டியர் காம்ரேட் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த 'விஜய் தேவரகொண்டா,' தற்போது 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். பூரிஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்துள்ளார். 'லைகர்' படத்தில் விஜய் தேவரகொண்டாவின் ஆக்சன் காட்சிகள், ரசிகர்களுக்கு மெரட்டலான ட்ரீட்டாக இருக்கும் என தெரிகிறது.

  ஆகஸ்ட்டில் ரிலீஸ்

  ஆகஸ்ட்டில் ரிலீஸ்

  விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் இவருகளுடன், பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ள 'லைகர்', ஆகஸ்ட் 25ல் ரிலீஸாகிறது. ஏற்கனவே இந்தப் படத்தோட ட்ரெய்லரும் ரிலீஸாகி, மாஸ் காட்டிருக்கு. விஜய் தேவரகொண்டா சும்மா நெருப்பு மாதிரி, ஃபயரிங் பெர்பாமன்ஸ் பண்ணி அசத்திருக்கார்.

  காஃபி வித் கரண்

  காஃபி வித் கரண்

  இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் நடத்தும், 'காஃபி வித் கரண்' ப்ரோகிராம்ல, விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டேவும் கலந்துகொண்டனர். இதில், 'லைகர்' படம் குறித்து கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, இருவரும் செம்ம ஜாலியாக பதிலளித்துள்ளாதாக தெரிகிறது. அதுமட்டும் இல்லாம, இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் வெளியே வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  காருக்குள் செக்ஸ்

  காருக்குள் செக்ஸ்

  காஃபி வித் கரண் ப்ரோமோவில் செக்ஸ் பத்தி விஜய் தேவரகொண்டா கூறியிருந்த சில பதில்கள், சோஷியல் மீடியாக்களில் செம்மையாக வைரலானது. மேலும், இந்த நிகழ்ச்சி குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கின. அதில், விஜய்யிடம் "கடைசியாக எப்போ செக்ஸ் வச்சீங்கன்னு" கரண் கேட்க, அதற்கு "அபார்ட் அபார்ட்" என சிரித்துக்கொண்டே சொல்கிறார். அதேபோல், 'காரில் செக்ஸ் வைத்துக்கொள்வது எனக்கு பிடிக்கும்' எனவும் விஜய் தேவரகொண்டா கூறி, ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

  நிர்வாண போட்டோ ஷூட்

  நிர்வாண போட்டோ ஷூட்

  சில தினங்களுக்கு முன்னர் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங், நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து புயலைக் கிளப்பியிருந்தார். வரவேற்பு, எதிர்ப்பு, நெட்டிசன்களின் மரண கலாய் என பரபரப்பாக இருந்த ரன்வீர் சிங் விவகாரம், இறுதியில் வழக்கில் போய் முடிந்தது. ரன்வீர் சிங்கை பார்த்து, நம்மூர் விஷ்ணு விஷாலும் நிர்வாண போட்டோ ஷூட்டை ரிலீஸ் செய்து, அமர்க்களப்படுத்தினார். இந்நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டாவும் "எனக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை, நிர்வாண போட்டோ ஷூட் தான, கொடுத்துட்டா போச்சு" என மஜாவாக பேசியுள்ளார்.

  English summary
  "Ready to give a nude photo shoot like Ranveer Singh": Tollywood celebrity speech gets viral!
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X