பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பேன்.. சுஷாந்த் மரணத்திற்கு நீதி கிடைக்கலைனா.. கங்கனா காட்டம்!
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்றால், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பேன் என நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக கூறி இருக்கிறார்.
Recommended Video
கடந்த மாதம் 14ம் தேதி மும்பை, பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.
ஆனால், அவர் தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தற்கொலையா? கொலையா?
ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அங்கு கிடைக்கவில்லை என போலீசார் தகவல் தெரிவித்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிலர் அவரை திட்டமிட்டு கொன்று இருக்கக் கூடும், மும்பை போலீசார் விசாரணை மட்டும் போதாது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கங்கனா ரனாவத்
பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம் பிரச்சனை தான் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை கொன்றுள்ளதாகவும், அதற்கான நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, அவரது ஆன்மா சாந்தி அடையும் வகையில், சரியான தீர்ப்பு வர வேண்டும் என்றும் அவரது மறைவுக்கு காரணமான பாலிவுட் பெரும் புள்ளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மற்ற பிரபலங்கள்
எம்.எஸ். தோனி பயோபிக் ஹீரோவின் பல மில்லியன் ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குநர் சேகர் கபூர், ரன்வீர் ஷோரே, மனோஜ் பாஜ்பாய், ஷ்ரத்தா தாஸ் என பல பாலிவுட் பிரபலங்களும் கங்கனா ரனாவத்தை போலவே பாலிவுட்டில் நிலவி வரும் நெப்போடிசம் பிரச்சனை குறித்து தைரியமாக பேசி வருகின்றனர்.

கங்கனாவிடம் விசாரணை
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் சுஷாந்த் சிங் ராஜ்புத் தொடர்பாக விசாரணை செய்யப்பட்ட நிலையில், கங்கனா ரனாவத், தன்னிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றால், தாராளமாக மும்பை போலீசார் அணுகலாம் என்றும், தன்னுடைய வாக்குமூலத்தை தர தான் தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். போலீசார் கங்கனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்ய தயாராக இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

பத்மஸ்ரீயை திருப்பித் தருவேன்
இந்நிலையில், சமீபத்தில் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில், இதுகுறித்து பேசிய நடிகை கங்கனா ரனாவத், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கான நியாயமான விசாரணை நடத்தப்படாமலும், நீதி கிடைக்காமலும் போனால், இந்திய அரசாங்கத்தால் சமீபத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கவும் தான் தயங்க மாட்டேன் என காட்டமாக கூறியிருப்பது பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலையை கிளப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











