முதல்முறையாக வீடியோ வெளியிட்ட ரியல் பிக் பாஸ்.. என்ன தத்துவம் சொல்றாருன்னு நீங்களே பாருங்க!
சென்னை: பிக் பாஸ் தமிழ் குரலுக்கு சொந்தக்காரரான நடிகர் சதீஷ் சாரதி சாஷோ வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
எண்ட்மோல் ஷைன் இந்தியா உலகம் முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் குரலாக செயல்பட்டு வருபவர் நடிகர் சதீஷ் சாரதி சாஷோ தான்.

கம்பீரக் குரல்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முகத்தை காட்டாமல் குரலாக மட்டுமே இருந்து செயல்பட்டு வருபவர் வேற யாரும் இல்லை, நடிகர் சதீஷ் சாரதி சாஷோ தான். பிக் பாஸ் நிகழ்ச்சி முழுவதும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுப்பதில் இருந்து கன்ஃபெஷன் ரூமில் அழைத்து பேசுவது என தனது கம்பீரக் குரலால் மிரட்டி வருகிறார்.

யார் இவர்
பாலிவுட்டில் 3 கோடியில் எடுக்கப்பட்டு 30 கோடி வசூலை ஈட்டிய மஞ்சுநாத் எனும் படத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சதீஷ் சாரதி சாஷோ. அதனை தொடர்ந்து 2017ம் ஆண்டு வெளியான பிஏ பாஸ் 2 படத்திலும் நடித்திருந்தார். மேலும் கஹானிபாஸ் எனும் படத்திலும் நடித்துள்ளார்.
முதல்முறையாக வீடியோ
இன்ஸ்டாகிராமில் sashospace என்கிற பெயரில் சத்தமின்றி வலம் வரும் நடிகர் சதீஷ் சாரதி சாஷோ தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முறையாக வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் அவர் சொல்லி உள்ள தத்துவமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

நீங்கள் யார்
அந்த வீடியோவில், உங்கள் பெற்றோர் நீங்கள் யார் என நினைப்பவர் நீங்கள் அல்ல, உங்கள் நண்பர்கள் உங்களை பற்றி நினைக்கும் நபராக நீங்கள் இருக்கக் கூடாது. உண்மையில் நீங்கள் யார் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என பக்காவான தத்துவத்தையும் பிக் பாஸ் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

அனிருத் உடன்
இன்ஸ்டாகிராமில் கடந்த பல வருடங்களாக ஆக்டிவாக இருக்கும் நடிகர் சதீஷ் சாரதி சாஷோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும், அனிருத்தை பாராட்டியும் அவர் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அடுத்த சீசனிலாவது பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்விலேயே சாஷோ முகம் காட்டுவாரா? என்பதை பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











