மரண சம்பவம் பண்ண ‘மாஸ்டர்’ வந்துட்டார்.. உலகளவில் ட்விட்டரை தெறிக்கவிட ரெடியா ஸ்டூடண்ட்ஸ்!
சென்னை: சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஆர்.ஜே. ரம்யா, செளந்தர்யா, அர்ஜுன் தாஸ், சேத்தன், கெளரி கிஷன், பிரேம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ள தளபதி 64 படத்திற்கு மாஸ்டர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
காலை முதலே #Thalapathy64FLday ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்த தளபதி ரசிகர்கள் பல லட்சம் ட்வீட்டுக்கு மேல் போட்டு ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தளபதி 64 படத்திற்கு வைக்கப்பட்டுள்ள இந்த தலைப்பு குறித்து ரசிகர்கள் என்ன கமெண்ட் செய்துள்ளனர் என்பதை இந்த ட்விட்டர் ரியாக்ஷனில் காண்போம்.
விஜய் ட்வீட்
பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கு பிறகு நடிகர் விஜய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘மாஸ்டர்' பட ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். ப்ளர் ஆன இமேஜில் இருக்கும் வித்தியாசமான போஸ்டராக மாஸ்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த சம்மர் நம்மளது தான்
முறை தான் ஒரு முறை தான் உன்னை பார்த்தால் அது வரமே என மாஸ்டர் பட ஃபர்ஸ்ட் லுக் ட்வீட்டுக்கு கீழே பதிவிட்டுள்ள இந்த தளபதி ரசிகர், இந்த சம்மர் நம்மளது தான் எனவும் கமெண்ட் செய்துள்ளார்.
வெறித்தனம்
எதிர்பார்த்ததை விட ஒருபடி மேலேயே இருக்கு வெறித்தனம் என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.
வசூல் மாஸ்டர்
தலைவா.. சரியான பேர் வச்சிருக்காங்க வசூல் மாஸ்டர் தளபதி தான் என்கிறார் இவர்.
சிங்கிள் வார்த்தை
கத்தி, மெர்சல், தெறி, சர்கார், பிகில் போல இப்பவும் சிங்கிள் வோர்ட் டைட்டில் என்கிறார் இவர்.
இந்த புத்தாண்டு நம்மளது
அவன் வர வரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு சிண்டு தொகுறுது.. அவன் எழுந்து கிழுந்து வந்துட்டானா இந்த புத்தாண்டு நம்மளது என புத்தாண்டுக்கு ட்ரீட் கிடைத்த சந்தோஷத்தில் தளபதி ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











