twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரும்பு பட்டறையில் அடிச்ச அனுபவம் தானா? கேஜிஎஃப் 2 இசையமைப்பாளரின் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி!

    |

    பெங்களூரு: 3 நாட்களில் 400 கோடி வசூலை நெருங்கி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது கேஜிஎஃப் 2 திரைப்படம்.

    படத்தின் ஆரம்பத்தில் தொடங்கும் பிஜிஎம் படத்தின் எண்ட் கிரெடிட்ஸ் வரை ரசிகர்களின் காதை கிழிக்கும் விதமாக பிரம்மிப்பு ஊட்டியது.

    அதற்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இரும்பு பட்டறையில் வேலை செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதன் பின்னணி என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

    33 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விதைகளின் நாயகன்... சின்ன கலைவாணரின் முதலாண்டு நினைவுநாள்! 33 லட்சம் மரக்கன்றுகளை நட்ட விதைகளின் நாயகன்... சின்ன கலைவாணரின் முதலாண்டு நினைவுநாள்!

    பிரம்மாண்ட வெற்றி

    பிரம்மாண்ட வெற்றி

    ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு சரியான பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் ஆக மாறியுள்ளது நடிகர் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் இருந்து இப்படியொரு கோலார் தங்கமாக கேஜிஎஃப் 2 படம் வெளியாகி இன்று உலகையே வியக்க வைத்து பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளது.

    360 கோடி வசூல்

    360 கோடி வசூல்

    ஏப்ரல் 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் திரைப்படம் தொடர்ந்து குட் ஃபிரைடே மற்றும் சனிக்கிழமை விடுமுறை என தியேட்டர்களில் அதிகாலை 4 மணி முதல் இரவு ஒரு மணி காட்சி வரை திரையிடப்பட்டு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் 300 கோடி வசூலை 3 நாட்களில் பெற்றதாகவும் உலகம் முழுவதும் 360 கோடி முதல் 370 கோடி வரை வசூல் செய்து 400 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    19 வயசு பையன்

    19 வயசு பையன்

    கேஜிஎஃப் 2 படத்தில் ராக்கி பாய் கார் எடுத்துக் கொண்டு தனது மனைவியை ஜான் கொக்கன் கடத்திச் செல்லும் போது துரத்தி வரும் காட்சியில், அத்தனை பெரிய ஸ்க்ரீனையே பிளாக் ஸ்க்ரீன் போட்டு போட்டு கட் பண்ணி எடிட் செய்து மிரட்டி இருப்பார். அப்படி செய்தது வெறும் 19 வயதான உஜ்வல் குல்கர்னி எனும் இளைஞர் என்கிற தகவலே ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ரவி பஸ்ரூர்

    ரவி பஸ்ரூர்

    இந்நிலையில், தனது இசையால் ராக்கி பாய், அதீரா, ராமிகா சென் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பிஜிஎம் போட்டு பில்டப் செய்து ரசிகர்களை கடைசி வரை என்கேஜிங்காக வைத்திருந்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

    இரும்பு பட்டறையில்

    இரும்பு பட்டறையில்

    கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு இசையமைத்த பிரபல கன்னட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இரும்பு பட்டறையில் இப்படி சாதாரணமாக இரும்பை உருக்கி வேலை செய்கிறாரே என அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னடா மனுஷன் இங்கிருந்தா வந்தார் என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர். மேலும், அதனால் தான் பிஜிஎம் முழுவதும் அந்த அளவுக்கு கணீரென இருந்தது என்றும் கொண்டாடி வருகின்றனர்.

    35 ரூபாய் சம்பளம்

    35 ரூபாய் சம்பளம்

    ஆமாம், தனது அப்பாவின் பட்டறையில் சிற்பியாக இருந்து இரும்பு வேலைகளை செய்து வந்தவர் தான் ரவி பஸ்ரூர். ஆரம்பத்தில் தனக்கு 35 ரூபாய் சம்பளம் கிடைக்கும் போது பெரிய சந்தோஷப்பட்டேன் என அவரே வெளியிட்ட காணொளி ஒன்றில் கூறியுள்ளார். லாக்டவுன் நேரத்தில் சொந்த ஊருக்கு சென்றிருந்த அவர் வேலை செய்யும் போது எடுத்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறதாம்.

    Recommended Video

    K.G.F: Chapter 2 Review in Tamil | கே ஜி எஃப் 2 விமர்சனம் | Yessa ? Bussa ? | |Yash | Sanjay Dutt
    உழைப்புக்கு ஊதியம்

    உழைப்புக்கு ஊதியம்

    ஆட்டோ ஓட்டி, பஸ்சில் பயணம் செய்பவர்களுடன் பேசி தனது படத்திற்கு புரமோஷன் செய்து வந்தவர் தான் நடிகர் யஷ். இப்படி கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கடுமையான பலரது உழைப்பு மற்றும் பிரம்மிக்க வைக்கும் கதைகள் உள்ளன. இத்தனை பேரின் உழைப்புக்கு கிடைத்த சரியான ஊதியமாகத்தான் இந்த வெற்றியை கேஜிஎஃப் 2 படக்குழுவினர் மற்றும் கன்னட ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

    English summary
    KGF Music Director Ravi Basrur’s blacksmith photo is trending on social media. He shared the photo, which he took during the Corona Virus's first lock down. He worked as a blacksmith at his initial stage with his father.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X