பாலாஜி முருகதாஸிடம் என்ன ஜாதி என்று கேட்டாரா சுரேஷ் சக்கரவர்த்தி.. உண்மையில் நடந்தது என்ன?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அடுத்த வத்திக்குச்சி வனிதா அக்காவாக மாறி உள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி.

Recommended Video

Anitha Sampath ஐ கடும்பாக்கிய Suresh • சூடு பிடிக்கும் பிக் பாஸ் வீடு

நடிகர், சமையல் கலை வல்லுநர் என பன்முகத் தன்மை கொண்டவர் சுரேஷ் சக்கரவர்த்தி.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் மற்றும் இரண்டாம் நாளில் தனது சிறப்பான ஆட்டத்தை ஆடி வருகிறார்.

ஷிவானியுடன் பாடல்

ஷிவானியுடன் பாடல்

இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்ற ஷிவானியை அழைத்து பாட தெரியுமா? ஒரு பாட்டு பாடுங்க என சுரேஷ் சக்கரவர்த்தி கேட்க, அவரும், செம ஸ்வீட்டான வாய்ஸில், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பாடலை பாடி அசத்தினார். அவருடன் சேர்ந்து கொண்டு சுரேஷ் சக்கரவர்த்தியும் பாட்டு பாடினார்.

ஒரு நிமிஷத்துல மிங்கிள்

ஒரு நிமிஷத்துல மிங்கிள்

அடுத்து, ஷிவானியை ஹவுஸ்மேட்ஸ்கள் டார்கெட் செய்த போது, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளே புகுந்து, ஒரே நிமிஷத்துல என் கூட மிங்கிள் ஆகி பாட்டெல்லாம் பாடுனீங்க, இப்போ ஏன் மூஞ்சியை இப்படி வச்சிருக்க என அவரிடம் வம்புக்கு வந்தார். ஷிவானியின் இன்ஸ்டா ரசிகர்கள் எல்லாம் சமூக வலைதளங்களில், ‘மொட்டை' உனக்கு அவ்ளோ தான் என திட்டித் தீர்க்க தொடங்கினர்.

எச்சில் தகராறு

எச்சில் தகராறு

அதே போல இரண்டாம் நாளில் செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்திடமும் மல்லுக்கட்டினார் சுரேஷ் சக்கரவர்த்தி. செய்திவாசிப்பாளர்கள் பேசும் போது எச்சில் தெறிக்கும் எனக் கூறியது சைல்டிஷ் ஆக இருந்தது என அனிதா பஞ்சாயத்தை பெரிது படுத்தி, குறும்படம் போடுவாங்க அப்போ தெரியும் என்றார். குறும்படம், நெடும்படம் எது போட்டாலும் நீ தான் மாட்டுவ என பதிலுக்கு அவரும் சண்டை செய்தார்.

ஜாதி பிரச்சனை

ஜாதி பிரச்சனை

இதற்கிடையே முதல் நாளே பாலாஜி முருகதாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் நீங்க என்ன ஜாதி எனக் கேட்ட பின்னரே, அவருக்கு கை கொடுத்து பேசினார் சுரேஷ் சக்கரவர்த்தி என டிவியில் ஒளிபரப்பாகாமல், ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான அன்சீன் காட்சிகளால் புதிய பிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளது.

என்ன தான் நடந்தது

என்ன தான் நடந்தது

இந்நிலையில், பாலாஜி முருகதாஸிடம் ஜாதி என்ன எனக் கேட்டு அவர் பேசவில்லை என்றும், அப்படி கேட்பவராக இருந்தால், மற்ற போட்டியாளர்களிடமும் கேட்டு இருப்பாரே? என்ற கேள்வியும். உண்மையிலேயே அங்கே என்ன நடந்தது என்கிற விளக்கமும் வெளியாகி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாயர்

நாயர்

சுரேஷ் சக்கரவர்த்தி பாலாஜி முருகதாஸை சந்தித்ததும், நான் சுரேஷ் என்றார். அதற்கு பாலாஜி தெரியும், மேனேஜர் சொன்னாரு என்றார். உடனே சுரேஷ் சக்கரவர்த்தி யாரு? என கேட்க, நாயர் என மேனேஜரின் பெயரை பாலாஜி முருகதாஸ் கூறுகிறார். இதை வைத்துத் தான் ஜாதி பெயரை சுரேஷ் கேட்டார் என்றும் அதற்கு பாலாஜி நாயர் என்று சொன்னார் என்றும் கிளப்பி விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X