உமா மகேஸ்வரி மரணத்திற்கு இது தான் காரணம்... வெளிப்படையாக சொன்ன சக நடிகை

சென்னை : சன் டிவி.,யில் ஒளிபரப்பான மிகவும் புகழ்பெற்ற சீரியலாக மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் உமா மகேஸ்வரி. இவர் வெற்றி கொடிகட்டு, அல்லி அர்ஜூனா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள உமா மகேஸ்வரி, கடைசியாக மஞ்சள் மகிமை என்ற சீரியலில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிக்க வாய்ப்பு குறைந்தது. பிறக விஜய் டிவி.,யில் கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

உமா மகேஸ்வரி மரணம்

உமா மகேஸ்வரி மரணம்

உமா மகேஸ்வரியின் கணவர் முருகன், கால்நடை மருத்துவராக உள்ளார். இவருக்கு வனஜா, சுனிதா என்ற சகோதரிகள் உள்ளனர். வனஜாவும் சின்னத்திரை நடிகை தான். மெட்டி ஒலி சீரியலில் லீலா கேரக்டரில் நடித்தவர். இந்நிலையில் உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் நேற்று காலை உயிரிழந்தார்.

காரணம் சொன்ன நடிகை

காரணம் சொன்ன நடிகை

40 வயதாகும் உமாமகேஸ்வரியின் திடீர் மரணம் சின்னத்திரை நடிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் மெட்லி ஒலி சீரியலில் உமா மகேஸ்வரியுடன் நடித்த சாந்தி வில்லியம்ஸ் பேட்டி ஒன்றில் உமா மகேஸ்வரி திடீரென உயிரிழக்க என்ன காரணம் என்பதை ஓப்பனாக தெரிவித்துள்ளார். உமாவுக்கு நெருக்கமானவர்களில் சாந்தி வில்லியம்சும் ஒருவர்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

சாந்தி வில்லியம்ஸ் கூறுகையில், உமா எனக்கு மகள் மாதிரி. அவரது மரண செய்தி கேட்டு ஷாக் ஆகி விட்டேன். இவ்வளவு சின்ன வயதிலேயே கடவுள் ஏன் இவர்களை போன்றவர்களை எடுத்துக் கொள்கிறார் என தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகை விஜே சித்ரா எங்களை விட்டு போனார். அந்த சோகம் மற்றும் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் நாங்கள் வெளியில் வரவில்லை. அதற்குள் உமாவும் போய் விட்டார்.

இது தான் காரணம்

இது தான் காரணம்

உமா மகேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார் என்பது தெரியும். அதற்காக சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார். சமீபத்தில் அதிலிருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார். ஆனால் இந்த மரணம் எப்படி நடந்தது என தெரியவில்லை. அவர் இல்லை என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை என்றார்.

ஈரோட்டில் சிகிச்சை

ஈரோட்டில் சிகிச்சை

மஞ்சள் காமாலையில் இருந்து மீண்ட உமாவிற்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, உமா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கதறி அழுத பிரபலங்கள்

கதறி அழுத பிரபலங்கள்

உமாவின் உடல், ஈரோட்டில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து மெட்டிஒலி சீரியல் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் கதறி அழுதுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X