»   »  என்னது, சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதா?

என்னது, சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பெயரில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல சலுகைகளை பெற முடியாத நிலையில் உள்ளோம். ஆதார் அட்டை இல்லாதவர்கள் தற்போது விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்த காரணத்தால் தற்போதும் ஆதார் மையங்களில் கூட்டமாக உள்ளது.

சில்க் ஸ்மிதா

சில்க் ஸ்மிதா

கால் கடுக்க ஆதார் மையங்களில் வரிசையில் நின்று மக்கள் விண்ணப்பிக்கிறார்கள். இந்நிலையில் 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதார்

ஆதார்

சில்க் ஸ்மிதா குடியிருந்த சென்னை வீட்டு முகவரிக்கு அவரது இயற்பெயரான விஜயலட்சுமி என்ற பெயரில் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எப்படி?

எப்படி?

ஆதார் அட்டையில் கை விரல் ரேகை, கண்ணின் கருவிழி எல்லாம் இருக்கும்போது உயிரோடு இல்லாத சில்க் ஸ்மிதாவுக்கு எப்படி அட்டை வழங்கப்பட்டது என்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.

டோணி

டோணி

கிரிக்கெட் வீரர் டோணியின் ஆதார் அட்டை தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபலத்தின் தகவல்களே வெளியாகிறது என்றால் சாதாரண நபர்களின் தகவல்களை சொல்லவா வேண்டும் என்று வியந்த நிலையில் உயிரோடு இல்லாத சில்கிற்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதே?

English summary
Buzz is that Aadhar card has been issued to late actress Silk Smitha. The card was reportedly sent to her Chennai addresss.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil