என்ன சொல்றீங்க.. ரூ. 12 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேறி உள்ளாரா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் காசு துட்டு மணி மணி என ஏகப்பட்ட பணப்பெட்டிகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இன்று வெளியான அனைத்து புரமோக்களிலும் ரூ. 8 லட்சம் வரை காட்டப்பட்டது.

இதுவே இந்த சீசன் போட்டியாளர்களுக்கு ஜாஸ்தி என ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில், ரூ 12 லட்சம் பெட்டியுடன் போட்டியாளர் ஒருவர் அதிரடியாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கம்மி காசுடன் வந்த சரத்குமார்

கம்மி காசுடன் வந்த சரத்குமார்

பிக் பாஸ் வீட்டிற்குள் திடீரென சரத்குமார் கெத்தாக நுழைந்த நிலையில், அவர் கையில் வெறும் ரூ. 3 லட்சம் மட்டுமே இருந்தது ரசிகர்களையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எப்படியோ பணத்தை எடுக்காமல் இருந்தால் தொகை அதிகமாகும் அப்போது தூக்கிடலாம் என போட்டியாளர்கள் பக்கா பிளான் போட்டு விட்டனர்.

8 லட்சம் வரை

8 லட்சம் வரை

சரத்குமார் கொண்டு வந்த ரூ. 3 லட்சம் பெட்டியை யாருமே பெரிதாக பொருட்படுத்த வில்லை. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரமோவில் ரூ. 7 லட்சம் பெட்டியும் அன்சீனில் அதிகபட்சமாக ரூ. 8 லட்சம் பெட்டியும் காட்டப்பட்டன. ஆனால், இன்னமும் பெரிய தொகை வரட்டும் என போட்டியாளர்கள் அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.

என்னது 12 லட்சமா

என்னது 12 லட்சமா

கடைசியாக ரூ. 10 லட்சம் மட்டுமே வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ரூ. 12 லட்சம் வரை வந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. அதற்கு மேல் விட்டு இருந்தால் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் கூட வைத்திருப்பார்களோ என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

யார் அந்த அதிர்ஷ்டசாலி

யார் அந்த அதிர்ஷ்டசாலி

ஆனால், ரூ. 12 லட்சமே தனக்கு அதிகம் என பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் 7 பேரில் ஒருவர் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது அடுத்த எபிசோடில் தெரிந்து விடும். அதிகபட்சமாக நிரூப், பாவனி மற்றும் தாமரை ஆகிய மூவரில் ஒருவர் எடுத்திருப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ராஜு எடுத்தாரா

ராஜு எடுத்தாரா

இன்னொரு பக்கம் மக்கள் சப்போர்ட் அதிகம் இருப்பதால் ராஜுவுக்கு பதிலாக இந்த சீசன் டைட்டிலை பிரியங்காவுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூ. 12 லட்சம் பெட்டியுடன் ராஜுவை பிக் பாஸ் குழு வெளியேற்றி உள்ளதாகவும் வதந்திகள் கிளம்பி உள்ளன. ராஜு நிச்சயம் அப்படி பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற மாட்டார் அவருக்கு ரூ. 50 லட்சம் கிடைக்கப் போகுது என்பது தெரியும் என்றும் ராஜுவின் ஆர்மியினர் உறுதியாக நம்பி வருகின்றனர். நேற்றைய எபிசோடிலும் பிக் பாஸ் கேட்கும் போது இப்போ நிறைய கான்ஃபிடன்ஸ் இருக்கு பிக் பாஸ் என ராஜு கூறிய நிலையில், நிச்சயம் அவர் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எதிர்பாராததை எதிர்பார்க்கலாமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X