விஷத்தை கக்கும் இந்த சவ்கிதார்கள் தான் நம்மை காக்கப் போகிறார்களா?: நயன் வில்லன்
மும்பை: இந்த சவ்கிதார்கள் தான் நம்மையும், நம் நாட்டையும் காக்கப் போகிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும், இயக்குநருமான அனுராக் கஷ்யப்.
பாஜகவினர் பலர் ட்விட்டரில் தங்களின் பெயருக்கு முன்னால் சவ்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துள்ளனர். அதில் இருந்து அந்த சவ்கிதார்களை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் கஷ்யப்பும் சவ்கிதார்கள் பற்றி ட்வீட் போட்டுள்ளார்.
அனுராக் கஷ்யப்
நான் ட்விட்டர் பக்கம் வந்தேன். இங்கு பல சவ்கிதார்கள் திட்டுவதுடன், விஷத்தை கக்குகிறார்கள். உண்மையில் இந்த சவ்கிதார்கள் தான் நம்மையும், நம் நாட்டையும் காக்கப் போகிறார்களா? இந்த வாட்ச்மேன்களை யார் கண்காணிக்கப் போவது என்று கேள்வி எழுப்பியுள்ளார் அனுராக் கஷ்யப்.
மோடி
சவ்கிதார்கள் மோடியையும், பாஜகவையும் பாதுகாக்கத் தான் உள்ளார்களே தவிர நம் நாட்டை அல்ல என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
ட்வீட்
அனுராக் கஷ்யப்பின் ட்வீட்டை பார்த்த சவ்கிதார்கள் பொங்கி எழுந்து அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படும் ஆளா அவர்.
காங்கிரஸ்
அனுராக் கஷ்யப் காங்கிரஸுக்கு ஆதரவாக பேசுவதாக அவரை விளாசுகிறார்கள் சவ்கிதார்கள்.


Click it and Unblock the Notifications











