சூர்யா41 படத்தின் சூட்டிங்கில் சூர்யா -பாலா மோதல்... வெளியானது உண்மை காரணம்!
குமரி : நடிகர் சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் சூர்யா 41. இந்தப் படத்தை பாலா இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் தற்போது முதல் கட்டத்தை முடித்துள்ளது. இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். சூர்யாவின் 41வது படத்தை தற்போது இயக்கி வருகிறார் பாலா. இந்தப் படத்தின் முதல் கட்ட சூட்டிங் கன்னியாகுமரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ளது.

18 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி
நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது. படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் அடுத்த மாதம் கோவாவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல்கட்ட சூட்டிங் நிறைவு
முன்னதாக முதல்கட்ட சூட்டிங் 34 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. இந்த சூட்டிங்கின் இடையில் சூர்யா மற்றும் பாலாவிற்கு இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் இதையடுத்து சூர்யா சூட்டிங்கின் இடையிலேயே கோபித்துக் கொண்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

உண்மைக் காரணம்
ஆனால் படக்குழு இந்தத் தகவலை மறுத்தது. இந்தப் படத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. முதல்கட்ட சூட்டிங்கின்போது அதிகப்படியான வெயிலில் சூர்யாவை ஓட வைத்துள்ளார் பாலா. இந்த சேசிங் காட்சியை அரை நாள் தொடர்ந்து அவர் எடுத்துள்ளார். இதனால் சூர்யா கடுப்பாகி சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார்.

சூட்டிங்கில் பரபரப்பு
அதை தொடர்ந்து அவருக்காக காத்திருந்த படக்குழு மாலையில் பேக்கப் செய்துவிட்டு கிளம்பியுள்ளனர். பாலாவின் படங்களில் மட்டுமில்லாமல் சூட்டிங் ஸ்பாட்டிலும் பல அதிரடிகள் நடப்பது எப்போதுமே வாடிக்கையாக நடைபெறும். அதுபோலவே இந்தப் படத்திலும் அது தொடர்வதாக சூட்டிங்கில் கலந்து கொண்டவர்கள் தற்போது முணுமுணுத்து வருகின்றனர்.
சூர்யா 41 படத்தை விரைவில் முடித்துவிட்டு அடுத்ததாக வெற்றி மாறனின் வாடிவாசல் சூட்டிங்கில் கலந்து கொள்ள சூர்யா ஆர்வம் காட்டி வருகிறார். இதை தொடர்ந்தே சூர்யா 41 படம் முதல்கட்ட சூட்டிங் தொடர்ந்து 34 நாட்கள் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து மதுரை மற்றும் கோவாவில் முறையே 40 மற்றும் 15 நாட்கள் சூட்டிங் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











