பட வாய்ப்பு இல்லை.. பரோட்டா கடையில் வேலை.. தீப்பெட்டி கணேசனின் திடீர் மரணம்.. கலங்க வைக்கும் காரணம்!

சென்னை: நடிகர் தீப்பெட்டி கணேசனின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் வெளிளியாகியுள்ளது.

ரேனிகுண்டா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் கார்த்தி என்கிற தீப்பெட்டி கணேசன். தொடர்ந்து தென்மேற்குப் பருவக்காற்று, பில்லா 2, நீர்ப்பறவை, கோலமாவு கோகிலா என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார்.

கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார் தீப்பெட்டி கணேசன்.

பிரபலங்கள் உதவி

பிரபலங்கள் உதவி

கொரோனா லாக்டவுன் நேரத்தில் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட தீப்பெட்டி கணேசனுக்கு தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் உதவி செய்தனர். நடிகர் சங்கம் சார்பில் அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

பரோட்டா கடையில் வேலை

பரோட்டா கடையில் வேலை

லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகள் நடைபெறாததால் பட வாய்ப்புகள் இன்றி பரோட்டா கடையில் வேலை பார்த்து வந்தார் தீப்பெட்டி கணேசன். ஜெய்ஹிந்துபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

திடீர் மாரடைப்பு

திடீர் மாரடைப்பு

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தீப்பெட்டி கணேசன்.

சிகிச்சை பலனின்றி..

சிகிச்சை பலனின்றி..

அவருக்கு 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் ஜெய்ஹிந்து புரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

அவரது உடலுக்கு ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீப்பெட்டி கணேசனின் மறைவை அறிந்த திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இனிமையான மனிதர்

இனிமையான மனிதர்

நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில், அவர் ரொம்ப இனிமையான மனிதர். ஆயிரம் விளக்கு படத்தில் என்னுடன் பணியாற்றினார். உங்களின் ஆன்மா இளைப்பாறட்டும் சகோதரா என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: renigunda
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X