அட்லீக்கு ஏற்பட்ட நஷ்டம்.. தயாரிப்பாளர்கள் தலையில் கட்ட திட்டம்?.. எல்லோரும் உஷார் ஆகிட்டாங்களாம்

சென்னை: ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அட்லீ; ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஹிந்தியில் ஜவான் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதன் காரணமாக இந்திய அளவில் அவர் கவனம் பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார். அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவிருப்பதாகவும்; அதற்கு நூறு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியான சூழலில்; அதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் புதிய பேச்சு ஒன்று அடிபட ஆரம்பித்திருக்கிறது.

முகப்புத்தகம் என்கிற குறும்படத்தால் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அட்லீ ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். மௌன ராகம் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் அட்லீயின் மேக்கிங் தரமாக இருந்ததன் காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி முதல் படத்திலேயே அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

reason behind Atlee s asking for a salary of Rs 100 crore has been revealed

விஜய்யுடன் கூட்டணி: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது படமாக விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. அதனையடுத்து மீண்டும் விஜய்யை வைத்தே மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இவற்றில் பிகில் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் நான்கு படங்கள் இயக்கி தமிழின் முன்னணி இயக்குநர் என்கிற பெயரை குறுகிய காலத்திலேயே பெற்றுவிட்டார். மேலும் நடிகர் விஜய்யின் குட் புக்கிலும் அவர் இடம்பிடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் என்ட்ரி: நான்கு படங்கள் தமிழில் இயக்கிவிட்டு உடனடியாக ஹிந்திக்கு சென்றார். முதல் படமே அவருக்கு ஜாக்பாட்டாக அமைந்தது. ஹீரோவாக ஷாருக்கான் கமிட்டானார். ஜவான் என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி என தென்னிந்திய நட்சத்திரங்கள் பணியாற்றினார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகளவில் 1000 கோடி ரூபாய்வரை படம் வசூலித்து சாதனை படைத்தது. முதல் படமே 1000 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்ததன் காரணமாக இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக உருவெடுத்துவிட்டார் அட்லீ.

reason behind Atlee s asking for a salary of Rs 100 crore has been revealed

தயாரிப்பில் இறங்கிய அட்லீ: ஜவான் வெற்றிக்கு பிறகு தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார் அட்லீ. அந்தப் படத்தை அவர் தயாரிக்க அவரது உதவி இயக்குநர் இயக்கினார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக இயக்குநர் அட்லீக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இதற்கிடையே ஜவான் படத்தை இயக்கி முடித்த அவர் அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவிருப்பதாக பேசப்பட்டது.

அட்லீ கேட்ட சம்பளம்: அந்தப் படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதற்காக அவர் 55 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும்; பட்ஜெட்டும் ஓவராக சொன்னதால் இந்த ப்ராஜெக்ட்டிலிருந்து அந்த நிறுவனம் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவிடம் சென்ற அட்லீ அவரிடம் நூறு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும்; ஏற்கனவே கேம் சேஞ்சர் படத்தால் உச்சக்கட்ட நஷ்டத்தை சந்தித்த தில்லும் இதிலிருந்து வெளியேறிவிட்டார் என்று தகவல்கள் கசிந்தன.

என்ன காரணம்?: இந்நிலையில் அட்லீ இத்தனை கோடி ரூபாய் சம்பளம் கேட்பதற்கு என்ன காரணம் என்றும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. அதாவது பேபி ஜான் (தெறி ஹிந்தி ரீமேக்) படம் அவருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்துவிட்டதாம். எனவே அந்த நஷ்டத்தை சரி செய்ய தனது சம்பளத்தை ஏற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை புரிந்துகொண்ட மற்ற தயாரிப்பாளர்கள் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நம்ம தலையில் கட்ட பார்க்கிறாரே என்று உஷாராகிவிட்டதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த படம்: இதற்கிடையே ஜவான் படத்துக்கு பிறகு அட்லீயின் மீதான கவனம் பாலிவுட்டில் பெருகியிருக்கிறது. அநேகமாக மீண்டும் ஷாருக்கானை வைத்து அவர் படம் இயக்குவார் என்றும்; அதனை முடித்து சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டிலேயே அவரது முழு கவனமும் இப்போது இருப்பதால் மும்பையிலேயே ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி தனது மனைவி ப்ரியாவுடன் செட்டிலாகிவிட்டார் அவர். இதற்கிடையே பேபி ஜான் படத்தையும் தயாரித்தார்.

அடுத்த மூவ்: அட்லீக்கு பேபி ஜான் பலத்த அடி கொடுத்தாலும் அடுத்த விஷயத்தில் தனது முதலீடை செய்திருக்கிறாராம் அட்லீ. அதாவது பிக்கிள் பால் என்ற விளையாட்டு ஃபேமஸாகிவருகிறது. அந்த பிக்கிள் பால் லீக் தொடர் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. இந்த லீக் தொடரில் நடிகை சமந்தா ஒரு அணியை வாங்கியிருக்கிறார். அதேபோல் அட்லீயும் பெங்களூரு அணியை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சமந்தாவை அட்லீ ஃபாலோ செய்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்: கீர்த்தி சுரேஷுக்கு பேபி ஜான் பட சமயத்தில்தான் திருமணம் நடைபெற்றது. அவர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் இரண்டு பேரும் முதன்முறையாக ஆர்குட்டில்தான் பேச ஆரம்பித்தோம். ஒரு மாதம் பேசியிருப்போம் என்று நினைக்கிறேன். பிறகு ரெஸ்டாரண்ட் ஒன்றில் முதலில் சந்தித்தோம். அப்போதும் நான் எனது குடும்பத்தினருடன் இருந்ததால் ஆண்டனியிடம் பேச முடியவில்லை. பிறகு ஒரு நாள் உனக்கு தைரியம் இருந்தால் எனக்கு புரோபோஸ் செய் என்று கூறினேன். 2010ஆம் ஆண்டு என்னிடம் அவர் காதலை சொன்னார். 2016ல் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தோம்.

இன்றுவரை இல்லை: அவர் அந்த சமயத்தில் எனக்கு கொடுத்த மோதிரத்தை இன்றுவரை நான் கழற்றவில்லை. அது என்னுடைய திருமணத்திலும் இருந்தது. நாங்கள் முதலில் வீட்டை விட்டு ஓடிப்போக நினைத்தோம். நான் 12ஆவது படித்தபோது அவர் கத்தாரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஆறு வருடங்கள் நாங்கள் தூரமாக இருந்தே காதலித்துவந்தோம். எங்களை ரொம்பவே நெருக்கமாக்கியது என்றால் கொரோனா காலகட்டம்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X