அதுக்குள்ள இப்படி கிளப்பி விட்டீங்களேய்யா.. வைரலான அந்த போட்டோவுக்கு காரணமே வேறவாம்!
சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாணும் பிரியா பவானிசங்கரும் நெருக்கமாய் இருந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே பல படங்களில் நடித்துள்ள ஹரீஷ் கல்யாண் அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரசிகைகளின் ஆதரவை பெற்ற ஹரீஷ் கல்யாணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தனது தனித்துவமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை வளைத்து போட்டுள்ளார் ஹரீஷ் கல்யாண்.

பதறிய ரசிகர்கள்
கடைசியாக அவரது நடிப்பில் தாராள பிரபு படம் வெளியானது. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூலையும் குவித்தது. இந்நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் பதறி போயினர்.

காதல் ஜோடி போல
காரணம்.. நடிகை பிரியா பவானிசங்கருடன் படு நெருக்கமாக இருந்தார் நடிகர் ஹரீஷ் கல்யாண். அதோடு கடைசியாக எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த போட்டோவும் அதற்கான கேப்ஷனும் டிபிக்கள் காதல் ஜோடியை போன்றே இருந்தது.

ரைஸாவுக்கு அல்வாவா?
அண்மையில்தான் பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் பிரச்சனையில் உள்ளதாக தகவல் வெளியானது. அதனுடன் இந்த போட்டோவை இணைத்து பார்த்த நெட்டிசன்கள், இருவரும் காதலிக்கிறார்களோ என கேள்வி எழுப்பினர். சிலர் ஒரு படி மேலே போய், என்ன பாஸ், ரைஸாவுக்கு அல்வாவா என்று கேட்டனர்.

வெளியான காரணம்
இருவரும் காதலிப்பதாகவே கிளப்பி விட்டனர். இதனால் நேற்று முழுக்க இந்த செய்திதான் ஹாட்டாய் இருந்தது. இந்நிலையில், அந்த போட்டோ மற்றும் கேப்ஷனுக்கு பின்னணியில் உள்ள காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இருவரும் இணைந்து மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்களாம்.

அதற்கு விளம்பரமாம்
கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவர கொண்டா - ரித்து வர்மா நடிப்பில் வெளியான பெல்லி சுப்புலு என்ற படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் தான் இருவரும் இணைந்து நடிக்க உள்ளார்களாம். அதற்குதான் இப்படி ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார்களாம் ஹரீஷ் கல்யாணும் பிரியா பவானி சங்கரும்.


Click it and Unblock the Notifications











