காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்த விக்கி... காரணம் என்ன தெரியுமா?

சென்னை: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். ரொமான்டிக் படமான இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் ஜரூராக நடைபெற்றது.

காதலர் தினத்தில் ரிலீஸ்

காதலர் தினத்தில் ரிலீஸ்

இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. அதாவது வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. ரொமான்டிக் படமான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் காதலர் தினத்தில் ரிலீஸ் செய்யப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால் இயக்குநர் விக்னேஷ் சிவன் படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எகிறும் எதிர்ப்பு

எகிறும் எதிர்ப்பு

ரிலீஸ் தள்ளிப் போனாலும் படத்தின் டீஸர் அல்லது சில அப்டேட்களை 2021 ஆண்டின் கடைசி வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பபார்ப்பு எகிறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2 நாயகிகளுடன் காதல்

2 நாயகிகளுடன் காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிகர் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் பிரபுவும், நயன்தாராவும் சமீபத்தில் டப்பிங் பேசிய போட்டோக்களும் வெளியானது. 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதியின் காதல் கதையை மைய்யப்படுத்தியதாக தெரிகிறது.

23ஆம் தேதி ராக்கி படம்

23ஆம் தேதி ராக்கி படம்

இந்தப் படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் வசந்த் ரவி நடித்துள்ள 'ராக்கி' திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X