Actor Rajinikanth: தள்ளிப் போன கூலி படத்தின் சூட்டிங்.. ரஜினிகாந்த் தான் காரணமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள கூலி படத்தின் சூட்டிங் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே திட்டமிடப்பட்ட சூழலில் படத்தின் புரொடக்ஷன் வேலைகளில் ஏற்பட்ட தாமதத்தால் சூட்டிங் இம்மாதத்திற்கு தள்ளிப்போனது. இமாதம் 10ம் தேதி படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கூலி படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூட்டிங் தாமதத்திற்கான காரணங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Rajinikanth Coolie movie Lokesh kanagaraj tamil cinema

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் தீபாவளியையொட்டி அக்டோபர் மாத இறுதியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ள கூலி படத்தின் சூட்டிங் இம்மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இம்மாதம் 10ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்ட சூழலில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajinikanth Coolie movie Lokesh kanagaraj tamil cinema

கூலி பட சூட்டிங்: முன்னதாக ஏப்ரல் மாதத்திலேயே கூலி படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டது. அதையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ப்ரோமோ உள்ளிட்டவையும் வெளியான சூழலில் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது தாமதம் ஆகியுள்ளது. எப்போதுமே சரியான திட்டமிடலுடன் தன்னுடைய படங்களை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் கூலி படத்தின் துவக்கத்திலேயே இந்த படத்தின் சூட்டிங் தாமதம் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சூட்டிங் தாமதம்: இந்நிலையில் கூலி படத்தின் சூட்டிங் தாமதத்திற்கான காரணம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இந்த படத்தின் டப்பிங் வேலைகளை இன்னும் நிறைவு செய்யாமல் உள்ளதாகவும் விரைவில் அதை அவர் நிறைவு செய்துவிட்டு ஒரே கட்டமாக கூலி படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கூலி படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடக்கவுள்ள சூழலில் முழுமூச்சில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாகவும் வேட்டையன் படத்தை முழுமையாக நிறைவு செய்துவிட்டு வர அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஜினியுடன் முன்னணி நடிகர்கள்: வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபாட்டி, ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளங்களே இணைந்துள்ளன. இந்நிலையில் கூலி படத்திலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை இணைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில் விரைவில் இது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள கூலி படத்தின் கதைக்களம் எப்படி அமையும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X