அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிடும் விக்னேஷ் சிவன்.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?

சென்னை : விக்னேஷ் சிவன் -நயன்தாரா இருவரும் கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.

திரைத்துறை பிரபலங்கள் சூழ இந்தத் திருமணம் மகாபலிபுரத்தில் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

தொடர்ந்து தாய்லாந்தில் ஹனிமூனை முடித்த இந்த ஜோடி தற்போது தங்களது பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நயன்தாரா -விக்னேஷ் சிவன்

நயன்தாரா -விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசை அடுத்து தங்களது திருமணம் குறித்து இவர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.

ஜூன் 9ல் திருமணம்

ஜூன் 9ல் திருமணம்

தொடர்ந்து கடந்த மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. ஷாருக்கான், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் சூழ இவர்களது திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் செல்போனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மிகவும் பாதுகாப்பான முறையில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

தாய்லாந்தில் ஹனிமூன்

தாய்லாந்தில் ஹனிமூன்

தொடர்ந்து நயன்தாராவின் அம்மா வீட்டில் சில தினங்களை கழித்த இந்த ஜோடி தாய்லாந்தில் ஹனிமூனை முடித்துவிட்டு நாடு திரும்பினர். தொடர்ந்து ஷாருக்கானுடன் இணைந்துள்ள ஜவான் படத்தின் சூட்டிங்கில் நயன்தாரா பங்கேற்றார். இருவரது காம்பினேஷன் காட்சிகளின் சூட்டிங் நடந்து வருகிறது.

திருமண புகைப்படங்கள்

திருமண புகைப்படங்கள்

விக்னேஷ் சிவனும் அஜித்துடனான ஏகே62 படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். மேலும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் துவக்க நிகழ்ச்சிக்கான பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தன்னுடைய திருமண புகைப்படங்களை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

திருமண வீடியோ

திருமண வீடியோ

இவர்களது திருமண வீடியோவை வெளியிடும் உரிமையை நெட்பிளிக்சிடம் 25 கோடி ரூபாய்க்கு நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி விற்றதாக முன்னதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் தங்களது திருமணத்திற்கு ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

Recommended Video

Nayanthara Marriage-க்கு Cute-ஆ வந்து வாழ்த்திய Surya, Jyothika
கைவிரித்த நெட்பிளிக்ஸ்

கைவிரித்த நெட்பிளிக்ஸ்

இந்நிலையில் தற்போது ஒரு திருமண வீடியோவிற்கு 25 கோடி ரூபாய் அதிகம் என்று நெட்பிளிக்ஸ் கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் மிகுந்த டென்ஷன் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்தே தற்போது திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X