Maaveeran - மாவீரனில் விஜய் சேதுபதி குரல் கொடுக்க இதுதான் காரணமா?.. வெளியான தகவல்

சென்னை: Maaveeran (மாவீரன்) சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்துக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்ததற்கான காரணம் தெரியவந்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் கடைசியாக பிரின்ஸ் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை பலப்படுத்தும் கணக்கில் அந்தப் படத்தில் நடித்த அவருக்கு ரிசல்ட் பலத்த அடியை கொடுத்தது. அவரது படங்கள் வரிசையில் மோசமான படம் என்ற பெயரை பெற்றது பிரின்ஸ். திரையிடப்பட்ட ஒரே வாரத்தில் திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டதால் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள் எஸ்கே ரசிகர்கள்.

 Reason behind Vijay Sethupathis voiceover for Sivakarthikeyan starrer Maaveeran has been revealed

டாக்டர் மற்றும் டான்: பிரின்ஸ் படத்துக்கு முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் ஆகிய இரண்டு படங்களும் நூறு கோடி க்ளப்பில் இணைந்தன. இதனால் அதே ஃபார்மில் தொடர நினைத்த அவருக்கு பிரின்ஸ் அடி கொடுத்தாலும் அடுத்ததாக கமிட்டாகியிருக்கும் மாவீரன் காப்பாற்றிக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.

மாவீரன்: மண்டேலா படத்தின் மூலம் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின் மாவீரனை இயக்குகிறார். அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க; மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

வாய்ஸ் ஓவர்: நிலைமை இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு மிஷ்கின் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில், மாவீரன் படத்துக்கு வாய்ஸ் ஓவர் கொடுப்பதற்காக ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோரிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். இருப்பினும் பிரபலம் ஒருவர்தான் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். அது யார் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என கூறி எதிர்பார்ப்பை கூட்டினார்.

விஜய் சேதுபதி வாய்ஸ்: இந்தச் சூழலில் படத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. சிவகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில், "நன்றி சகோதரர். மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி" என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட்டும், விஜய் சேதுபதி குரல் கொடுத்ததும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

என்ன காரணம்?: இந்நிலையில் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்ததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அந்த அசரீரி குரலுக்கு பலரிடமும் படக்குழு பேசியிருக்கிறது. ஆனால் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து மிஷ்கின் விஜய் சேதுபதியிடம் பேசினாராம். அதனையடுத்துதான் விஜய் சேதுபதி ஒத்துக்கொண்டார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X