தள்ளிப்போன புஷ்பா படத்தின் ரிலீஸ்... காரணம் என்ன தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பது உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

தள்ளிப்போன புஷ்பா படத்தின் ரிலீஸ்... காரணம் என்ன தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

வேளாண் சட்டங்கள் ரத்து

வேளாண் சட்டங்கள் ரத்து

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றது குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி குருநானக் ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என அதிரடியாக அறிவித்தார்.

மாநாடு படத்தின் பாடல்கள்

மாநாடு படத்தின் பாடல்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் பாடல்கள் குறித்தும் கூறியுள்ளார் பிகே. மாநாடு படம் கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் குறித்து கூறியுள்ளார் பிகே.

ரூ.30 கோடியை திருப்பிக்கொடுத்த ரஜினி

ரூ.30 கோடியை திருப்பிக்கொடுத்த ரஜினி

இதேபோல் அண்ணாத்த படக்குழுவினரின் சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் குறைக்கப்பட்டது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் மழையால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை முன்னிட்டு படக்குழுவினரின் சம்பளத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டதாகவும், இதனை அறிந்த ரஜினிகாந்தும் தனது சம்பளத்தில் இருந்து 30 கோடி ரூபாயை கொடுத்ததாக கூறியுள்ளார் பிகே.

எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி..

எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி..

தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பு குறித்த தகவலை கூறியுள்ளார். மேலும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல் மற்றும் அந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

ரிலீஸ் தள்ளி போனது ஏன்?

ரிலீஸ் தள்ளி போனது ஏன்?

இதேபோல் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமான 83 படம் அன்றைய தினம் ரிலீஸ் செய்யப்படுவதால் புஷ்பா திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X