பார்க்கணும், இந்த காரணங்களுக்காக #Seethakaathi படத்தை பார்க்கணும்

By Siva

சென்னை: சீதக்காதி படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கு காரணங்கள் உள்ளன.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்த சீதக்காதி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஹீரோவான வேகத்தில் மடமடவென வளர்ந்து நிற்கும் விஜய் சேதுபதியின் 25வது படம் இது.

இந்நிலையில் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சீதக்காதி விஜய் சேதுபதியின் 25வது படம் என்பதால் இது அவரின் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுதி சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவானார். குறுகிய காலத்தில் பெரிய ஹீரோவாகிவிட்டார். 70 வயது முதியவராக அவர் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாலாஜி தரணிதரன்

பாலாஜி தரணிதரன்

இயக்குனர் பாலாஜி தரணிதரன் தனது முதல் படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ஆறு ஆண்டுகள் கழித்து தனது முதல் பட ஹீரோவையே வைத்து அவர் இயக்கியுள்ள படம் சீதக்காதி. விஜய் சேதுபதி, பாலாஜி கூட்டணி என்பதால் ரசிகர்களிடையே ஆவல் ஏற்பட்டுள்ளது.

கோவிந்த் வசந்தா

கோவிந்த் வசந்தா

96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் சீதக்காதி படத்திற்கும் இசையமைத்துள்ளார். அதனால் இந்த படத்திலும் ஒரு காதலே காதலே போன்ற பாடலை எதிர்பார்க்கலாம்.

வித்தியாசமானது

வித்தியாசமானது

பிரபலமான மேடை நாடக கலைஞர் சினிமா நடிகராவது பற்றிய கதை. வித்தியாசமான கதையை தனது 25வது படத்திற்கு தேர்வு செய்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு துணிச்சல் தான்.

டீஸர்

டீஸர்

சீதக்காதி படத்தின் டீஸர், ட்ரெய்லர், ஸ்னீக்பீக்குகளே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படி என்றால் படத்தை பற்றி சொல்லவா வேண்டும். மேலும் நான் படத்தில் வெறும் 40 நிமிடம் மட்டுமே வருவேன் என்ற உண்மையை சொன்ன விஜய் சேதுபதியின் நேர்மைக்காக அதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X